கறிக்கோழிகள்
பிறந்த கோழிக்குஞ்சுகள் முதல் 7 நாட்கள் பராமரிப்பு: கறிக்கோழிகளின் உடல் எடை 40 நாட்களில்50 மடங்காக அதிகரிக்கிறது. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களால் 35 நாட்களில் 2 கிலோ உடல் எடையை 1.75க்கும் குறைவான தீவன மாற்றுத் திறனுடன் அடைய முடிகிறது. அதேபோல் முட்டை உற்பத்தியிலும் 320-330 முட்டைகள் என்ற இலக்கை எளிதில் அடைய முடிகிறது.
குஞ்சு பொரித்தவுடன் தீவனமளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்: கறிக்கோழிகளின் வளர்ச்சி 100மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்றது. ஆரம்பகாலத்தில் வளர்ச்சியில் ஏற்படும் தொய்வு என்றைக்கும் ஈடு�ய்ய முடியாதது. எனவே குஞ்சுகளுக்கு உடனடியாக தீவனம் உண்ணும் முறையை கற்பித்து தரமான, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய தீவனத்தை அளிக்க வேண்டும். பூஞ்சை பாதிக்கப்பட்ட தீவனத்தை கொடுத்தால் உணவுப்பாதையிலிருந்து பல நோய்க்காரணி புரதம் உறிஞ்சப்பட்டு பசைநீர் சுரப்பியை அடையும். இதனால் இயற்கையான நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்து குஞ்சுகள் எளிதில் நோய்வாய்ப்பட ஏதுவாகிறது. இதனைத் தடுக்கவும் சிறந்த உடல் நலம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் கூடுதல் தீவன ஊக்கிகளை ஆரம்பகால உணவில் சேர்க்க வேண்டும்.
குஞ்சு பொரிப்பகத்திலிருந்து வெளியூர் கோழிப்பண்ணைகளில் குஞ்சுகளை சேர்க்கும் வரையிலான இடைப்பட்ட காலம். 3 மணிக்கு மேல் எனில் ரவை அல்லது அரைக்கப்பட்ட தானியங்களை உணவாக அளிக்க வேண்டும். தவிர தரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படின் எலக்ட்ரோலைட் மற்றும் ஆதரவு நுண்மங்கள் (புரோபையாட்டிக்) கலந்த குடிநீரை அளிக்க வேண்டும். இதன்மூலம் இளம் குஞ்சுகளில் ஏற்படும் இறப்பை 50 சதவீதம் வரை குறைக்கலாம்.
குஞ்சு பொரித்தவுடன் தீவனம் அளிப்பதால் ஜீரண உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் சுரக்கப்படும் நொதிகளின் அளவு அதிகரித்து சத்துக்கள் உட்கிரகித்தல் அதிகரிக்கிறது.
கோழிக்குஞ்சுகள் பண்ணையைச் சென்றடையும் முன்பாகவே தீவனம் மற்றும் தண்ணீர் அளிப்பதால் குடலில் நன்மை பயக்கும் நுண்கிருமிகள் பெருகி நிலைநிற்க ஏதுவாகிறது. இளம் குஞ்சுகளில் கொழுப்புப் பொருட்களை செரிமானம் செய்ய உதவும் லைபேஸ் என்ற நொதி முதல் வாரத்தில் குறைவாக சுரப்பதால் கொழுப்பு மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் "ஏ, டீ மற்றும் இ' ஆகியவற்றில் உட்கிரகித்தல் குறைவு. எனவே கோழிக்குஞ்சுகளின் ஆரம்ப தீவனத்தில் (பிரி ஸ்டார்ட்டர் மாஸ்) லெசிதின் மற்றும் சோயலெசிதின் ஆகியவற்றை கலந்து கொடுக்க வேண்டும்.
தற்சமயம் மரபியல் முன்னேற்றத்தின் காரணமாக கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி வேகம் வெகுவாக அதிகரித்துள்ளது. வேகமாக வளரும் குஞ்சுகளுக்கு தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும். குஞ்சுகள் பண்ணையைச் சென்றடைய பொதுவாக 12 முதல் 18 மணி நேரம் தேவைப்படுகிறது. இக்கால கட்டத்தில் பொரிப்பகத்திலும் மற்றும் குஞ்சுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் குஞ்சுகளுக்கு தீவனம் மற்றும் குடிநீர் கொடுப்பதால் குஞ்சுகளின் இறப்பு விகிதம் குறைந்து உற்பத்தித்திறன் அதிகரிக்க ஏது வாகிறது. (தகவல்: மா.ரா.புரு�ஷாத்தமன், ரா.வெ.செந்தில்குமார், து.சந்திரமோகன், கால்நடை உணவியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-637 002)டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
------------------------------ -------------------------
வருமானத்திற்கு அழகு கோழிகள்
நகர்ப்புறங்களில் பெருப்பாலும் வீடுகள், முக்கிய அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களில் பேன்சிரக கோழிகள் அழகுக்காக வளர்க்கப் படுகின்றன. பேன்சி ரக கோழிகளில் பலவகை உண்டு. அவ்வகை பேன்சிரக கோழிகளில் சில வகையான பஞ்சுகோழி, போலீஸ் கேப்,சில்வர் சில்கி, அமெரிக்கன் கிரில், பேந்தம், கடக்கநாத்து, டேபிள் பைட், பிரம்மா மற்றும் கிரிராஜா போன்ற ரகங்கள் தமிழகத்தில் வளர்க்கப்படுகிறது. மேலும் கின்னி கோழிகள் வான்கோழிகள் மற்றும் உயர்ரக வாத்துகள் போன்றவையும் கிராமப் புறம், நகர்ப்புறம் என்ற பாகுபாடின்றி அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. நாட்டுக் கோழிகளைப் போல் அல்லாமல் பேன்சி ரக கோழிகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தரமான தீவனங்களும், அதற்குண்டான மருந்துகளைக்கொடுத்துவளர்த்துவர வேண்டும். வியாபார ரீதியாக கோழிகளை வளர்க்க விரும்புவோர் குறிப்பிட்ட சில ரகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பில் முன் அனுபவமும் பயிற்சியும் பெற்ற நபர்களின் மேற்பார்வையில் வளர்க்க வேண்டும்.
பேன்சிரக கோழி வகைகளில் பஞ்சுகோழி என்பது உடல் முழுவதும் ரோமங்கள் இருப்பதுடன் காலில் ஷு போட்டது போல் கால் முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்படும். போலீஸ்கேப் என்பது தலையில் தொப்பி அணிந்ததுபோல் கொண்டையுடன் காணப்படும். சில்வர் சில்கி என்பது அதன் இறகுகள் கோழியைவிட மிக உயரமாக வளர்ந்து வளைந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அமெரிக்கன் கிரில் என்பது அதன் இறகுகள் ஒவ்வொன்றும் சுருண்டு சுருண்டு காணப்படும். பேந்தம் என்பது அதன் இறகுகள் ஒவ்வொன்றும் சுருண்டு சுருண்டு காணப்படும். பேந்தம் என்பது எல்லாக் கோழிகளைவிட குட்டையாக, அழகாக இருக்கும். கடக்கநாத்து என்பது பார்ப்பதற்கு சாதாரண நாட்டுக்கோழியை போல் இருந்தாலும் அதன் தோல், ரத்தம், இறைச்சி, ஈரல் வரை அனைத்தும் கறுப்பு நிறமாக இருக்கும். மேலும் மருத்துவ பயன் பாட்டிற்கும் இவ்வகை கோழி பயன்படுகிறது.
கின்னி கோழிகள் தோப்புகளில் இருக்கும் புழு, பூச்சிகளை உண்ணுவதன் மூலம் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்குகிறது. கின்னி கோழிகள் வளர்ப்பது மிகவும் எளிது. இவற்றை அதிக நோய் தாக்குவது இல்லை. கின்னி கோழிகள் மூன்று வகையாக உள்ளன. அவை சிவப்புதாடை,நீலநிற தாடை, வெள்ளை கின்னி எனப்படும். கின்னிகோழிகள் 25வது வாரத்தில் பருவத்திற்கு வந்து40வது வாரத்தில் முட்டையிட ஆரம்பிக்கும். கின்னிகோழியில் 4 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது.
கோழிகளை வாங்கும்போது நல்ல கால்நடை மருத்துவ ஆலோசகரின் ஆலோசனையில் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளில் வாங்குவது நல்லது. கோழி தீவனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து தீவனங்கள் பெற்று கோழிகளுக்கு கொடுப்ப துடன் தோட்டங்களில் இயற்கையாக கிடைக்கும் புல் பூண்டுகள், கொழுக்கட்டை, குதிரை மசால், வேலி மசால் மற்றும் கீரை வகைகள், அருகம்புல் போன்றவைகளைக் கோழிகளுக்கு கொடுக்கலாம். கோழிப் பண்ணை அமைப்பதற்கும் ஈமு கோழிப்பண்ணை அமைப்பதற்கும் அரசு வங்கிகளில் கடனுதவி செய்து விவசாயிகளுக்கு உதவி வருகின்றது.





0 comments:
Post a Comment