Thursday, September 15, 2011

திமுக தனித்துப் போட்டி: காங்கிரசுக்கு சுமை குறைந்தது என்கிறார் இளங்கோவன்!

EVKS Elangovanசென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, இதன்மூலம் காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துவி்ட்டது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திமுக எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துள்ளது.

திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களோ, காங்கிரஸாரோ விரும்பவில்லை என்பது தெரிந்துதான் திமுக தலைவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக்கூடும்.
வரும் உள்ளாட்சி தேர்தல்லில் திமுகவினருக்கு காங்கிரஸ் தொண்டர்களின் ஒத்துழைப்பு இருக்காது என்று தெரிந்துதான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்திருப்பார். இது வரவேற்கத்தக்கது.

தேவை ஏற்பட்டால் காங்கிரஸ் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More