எதிர்பாரா கணத்தில் ஒலித்த
அலாரம் திக்கு முக்காட வைக்க
கடிகாரத்தினைஅதிசயத்தோடு பார்க்க
அதுவோ நான் அவனில்லை என
கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்ய
ஆச்சரியத்தில் திரும்பிய வேளை
கொதித்த எண்ணெய் தாச்சியில்
விழுந்த கோழியை போல், இங்கே
மேசையின் மீதிருந்த தொலைபேசி
ரீங்காரத்தில் போரிந்துகொண்டிருந்தது.
யாராய் இருக்கலாம் அலைகழிக்கும்
கேள்வி ..? மனதை ஆசுவாசப்படுத்த
காதில் பொருத்திக் கொள்ளுகிறேன்.
தொலைபேசி முகப்பில் தோன்றிய
புதிய எண் ...பொறி தட்ட ஹலோ வை
உதிர்க்காமல்... மௌனமாய்
சில வினாடிகள்... புரிந்து கொண்டேன்.
புது வரவு அச்சமும் நாணமும் ஒன்று
சேர்ந்து தொண்டை குழியை நெருக்க
வார்த்தைகளை பிரசவிக்கமுடியாத
தர்மசங்கடமான நிலையில் நீ ....
ஹலோ என நான் உதிர்த்த வார்த்தை
நெருக்குதலில் இருந்து உனை விடுவிக்க
வார்த்தைகள் சுகபிரசவமாகி
ஹாய் என்னை தெரிகிறதா என்ற
குழந்தை தனமான கிசுகிசுக்க ....
பேஸ் புக் சாட்டின் உனது எழுத்துக்களை
கொண்டு நான் உருவகித்திருந்த
அந்த உருவத்தை உன் குரலிலும்....
அடையாளம் கண்டு கொள்ளுகிறேன்.
நீ தொலைபேசியில் கிசுகிசுத்தது
என் காதுகளில் அல்ல
இதயத்தின் உயிர் நாளங்களில்
அவை வேகமாய் செயல்பட்டு
குருதி சுற்றோட்டத்திலே பரவவிட்டிருந்த
உனது வருகையின் செய்தி ஒக்சிஜனாய்
தேகமெங்கும் பரவி எனது எடை பாதியாக்கி
பரவசத்தில் அந்தரத்தில் மிதக்கவிட்டது .
( முகம் தெரியாத நண்பியின் முதல் தொலைபேசி உரையாடல் அனுபவம்.)





0 comments:
Post a Comment