ஷேர் மார்கெட் கூடுமா ?
ஓதிப் பார்த்தல் கூடுமா ?
அநீதிகளும் அபகரித்தலும்
யாகுத்பா ஓர் ஆய்வு
|
இஸ்லாத்தில் உருவ வழிபாடு உண்டா ?
பைபிளில் நபிகள் நாயகம்
தர்கா வழிபாடு
ஓரிறைக் கோட்பாடு
ஐஏஎஸ் படிப்பு பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்-
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குரிய நுழைவுத் தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்குரிய நுழைவுத் தேர்வு 30.10.2011 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27.9.2011 கடைசி நாளாகும்.
விண்ணப்பங்களைப் பெற மாணவ, மாணவியர் கல்விச் சான்று நகல் மற்றும் எழுத்துப்பூர்வ மனு அளிக்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு படித்த கல்வித் தகுதி இருக்கவேண்டும். வயது,இருப்பிடம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் வரவேண்டும்.
விண்ணப்பதாரர் 21 வயது உள்ளவர்களாகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 27.9.2011 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
1.8.2011 தேதியின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர் 21 முதல் 35 வயதுக்குள்ளும், 31.7.1977-க்கு பிறகு 31.07.1991 வரை பிறந்தவராக இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வகுப்பினர் 21 முதல் 33 வயதுக்குள்ளும், 31.7.1979-க்கு பிறகு 31.9.1991 வரை பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
இதர பிரிவினர் 21 முதல் 30 வயதுக்குள்ளும், 31.7.1982-க்கு பிறகு 31.7.1991 வரை பிறந்தவராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மானக்கேடு,மானக்கேடு, இப்படிச் சொல்ல ஆள்வோருக்கு கொஞ்சம்கூட
வெட்க்கமில்லை. இந்தியாவின் ஜானாதிபதியே ஒப்புதல்
மருந்து தயாரிப்பு தொழில் என்பதும் மருத்துவ தொழில் போல புனிதமானது. மக்களின் உடல்நலன்,உயிர் பாதுகாப்பு ஆகியவை மருந்துகளில் அடங்கியுள்ளது. எனவே இதில் பாதுகாப்பும், தரமும் மிகமிக முக்கியம். இவற்றில் அதிக கவனம் செலுத்துவது நிறுவனங்களின் பொறுப்பு.
எனவே மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நீதிநெறிகளுக்குக் கட்டுப்பட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போலி மருத்துகளையும், உடல் நலத்துக்கு தீமை விளைவிக்கக் கூடிய மருந்துகளையும் தயாரிப்பது குற்றம். உலக அளவில் 50 சதவீத மருந்துகள் தவறான முறையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே மருந்துகளை உள்கொள்பவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இந்திய மருத்துவத் துறையில் இந்த ஆண்டில் ரூ.56,400 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 2015-ல் இது ரூ.94,000 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ அறிவியல், மருந்து தயாரிப்புத் துறை மிகவேகமாக வளர்ந்து வந்தாலும், நாட்டில் பெரும்பாலான மக்கள் சரியாக மருந்து கிடைக்காததால் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். முக்கியமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அனைத்து மக்களுக்கும் மருந்துகள் கிடைப்பது இல்லை. அவ்வாறு கிடைத்தாலும் அவை ஏழை எளிய மக்கள் எளிதில் வாங்கும் விலையில் இல்லை. எனவே அனைவரும் வாங்கக் கூடிய விலைகளில் மருந்துகளை விற்க முன்வர வேண்டும் என்றார்.





0 comments:
Post a Comment