Tuesday, September 13, 2011

கேரள முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்த்து பொள்ளாச்சியில் கருப்புக் கொடி போராட்டம்!

பொள்ளாச்சி: கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து பொள்ளாச்சிக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி வந்தபோது அவரை எதிர்த்து பெரியார் திராவிட கழகம் சார்பில் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள அரசு தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணையைக் கட்டவும், பழையை அணையை இடித்துத் தள்ளவும் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஒரு ஊருக்குச் செல்வதற்காக பொள்ளாச்சி வழியே பயணித்தார்.

இதையடுத்து அவரை எதிர்த்து பெரியார் தி.க. சார்பில் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் கூடி கருப்புக் கொடி காட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More