Tuesday, September 13, 2011

நமது சென்னை அன்றும் இன்றும்



   




அந்தக் காலத்திய மாம்பலத்தில் வினோதமாக சமையல் அறைக்கும் "டைம் ஷேர்இருந்தது. ஒரு குடும்பம் சமைத்து முடித்து விட்டுப் போன பின்புதான் இன்னொரு குடும்பம்

மாம்பலம் என்ற கிராமத்தில் என்று தொடங்கி கதைகட்டுரை எழுதினால் வாசகர்களே ஒருவேளை அதை ஒரு கற்பனை இடம் என்றோஎங்கோ ஒரு கிராமம் என்றோ நினைக்கலாம். சுமார் 80வருடங்களுக்கு முன்பு (1923) அன்று மாம்பலம் என்று அழைக்கப்பட்ட இன்றைய தி. நகரில் அங்கும் இங்குமாகச் சில வீடுகளும் கடைகளும் மட்டும்தான் இருந்தன. இன்று?

இப்போதைய தி. நகரின் தெற்குப் பகுதி 1916 வாக்கில் பெரிய வயல்வெளியாக இருந்தது. வடமேற்குப் பகுதி நீண்ட ஏரி. அப்போது மாம்பலம்தான். தியாகராய நகர் என்று பெயர் மாற்றப்பட்டது பிறகுதான். அப்பொழுது மாம்பலத்தில் சுப்ரமணிய ஐயர் என்ற ஒரு ஸ்டேஷன் மாஸ்டருக்குச் சொந்தமாக சுமார் நூறு ஏக்கர் நிலம் இருந்தது. அதாவது கணக்குப் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்போதைய மாம்பலம் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பர்க்கிட் ரோடு தொடங்கி,வெங்கட்நாராயணா சாலையில் திரும்பி மவுண்ட் ரோட்டைத் தாண்டி தெற்கு உஸ்மான் சாலையில் முடியும் செவ்வகம் எவ்வளவு விஸ்தீரணமானது என்று.

அவர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருந்தார். குத்தகை வரவு மிகவும் குறைவு. அதை வசூலிக்கப் பாடுபட வேண்டியதுடன் அரசாங்கத்திற்கு நிலவரி கட்ட வேண்டியது இன்னொரு சங்கடமாக இருந்தது. குத்தகை வரவும் நிலவரியும் ஏறத்தாழ சரிசமம் என்பதனால்இதில் லாபம் இல்லை என்று நினைத்த அவர் அந்த மிகப் பெரிய நிலப்பரப்பை விற்றுவிட்டார்.

       

இன்று பர்க்கிட் ரோடு தொடங்கி நான் மேலே சொன்ன எல்லைகளைக் கொண்ட இடத்தின் மனை மதிப்பு பல நூறு கோடி ரூபாய்கள். இது பொன் விளையும் பூமி என்று அன்று தீர்க்க தரிசனமாக உணர்ந்திருந்தால் நிலத்தை அப்போது விற்றிருப்பாராஇப்போது விற்றால் அவருக்கு எவ்வளவு ஆயிரம் கோடிகள் தேறும் என்று நினைத்துப் பாருங்கள். மலைப்பாக இருக்கும்.

இன்று வாழ்க்கை முறை பெரிதும் மாறிவிட்டது. நவீன வாழ்க்கையில் இனி சமையல் அறை தேவைப்படாது போலிருக்கிறது. ஃப்ரிட்ஜ்மைக்ரோ அவண் மட்டும் போதும். அவற்றை டைனிங் ஹாலில் வைத்துவிடலாம். ஆனால் அந்தக் காலத்திய மாம்பலத்தில் வினோதமாக சமையல் அறைக்கும் "டைம் ஷேர்இருந்தது. எங்கள் அந்தக் கால வாடகை வீட்டு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்போது சென்னையிலும் பிற ஊர்களைப் போலவே அநேகமாக எல்லா வீடுகளும் சொந்த உபயோகத்திற்காகவே கட்டப்பட்டன. வீடு ஒரு முதலீடுகட்டி வாடகைக்கு வீடுகள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.

Marina Beach, Chennai - Now and Then Photography
வீட்டுக்காரர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குடித்தனக்காரர்களுக்கு வீடுகள் வசதியாக அமையவில்லை. பாதுகாப்புபேச்சுத் துணை அல்லது உரியவர்கள் தொலை தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்ற காரணங்களினால் சிறிய வீடுகளோ அல்லது பெரிய வீட்டின் ஒரு பகுதியோ வாடகைக்குக் கிடைத்து வந்தது. எங்கள் வீட்டில் ஒரே ஒரு சமையல் அறைதான் இருந்தது. ஒரு குடும்பம் சமைத்து முடித்து விட்டுப் போன பின்புதான் இன்னொரு குடும்பம் சமையல் அறையைப் பயன்படுத்த முடியும். இரு குடும்பத்தினரும் தமக்குள் அனுசரித்துக் கொண்டுமுறை வைத்து சமையல் செய்வார்கள். ஆக ஒற்றுமை தேவைப்பட்டகடிகாரம் தேவைப்பட்டஇடமாக இருந்தது சமையல் அறை.
Marina Beach, Chennai - Now and Then PhotographyMarina Beach, Chennai - Now and Then Photography

தி. நகர் உருவான காலகட்டத்தில் மாம்பலம் ஹைரோடு மேற்கு எல்லைமவுண்ட்ரோடு கிழக்கு எல்லைவடக்கு எல்லை பசுல்லா ரோடுதெற்கு எல்லை பர்க்கிட் ரோடு. பொதுவாக எல்லா நகரங்களிலும் கிழக்குப் பகுதி வேகமாக வளரும் என்பார்கள். தி.நகர் விதிவிலக்கு. இங்கே தெற்குப் பகுதியே இன்றும் வேகமாக வளர்ந்து வருகிறது. காரணம் பஸ் ஸ்டாண்டுரயில்வே ஸ்டேஷன்,சிறியபெரிய கடைகள் தெற்கேதான் இருக்கின்றன.



மாம்பலத்தின் இரண்டு முக்கிய தெருக்கள் கோபதி நாராயணசாமி செட்டி சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை. இருபுறமும் மரங்கள்பெரிய பெரிய பங்களாக்கள் என்று நான் என் மாணவப் பருவத்தில் அங்கே கண்ட காட்சி இப்பொழுது பெரிதும் மாறிவிட்டது. பேனோசோனிக்சோனி போன்ற பெரிய நிறுவனங்களின் ஷோரூம்கள்கம்ப்யூட்டர் நிறுவனக் கட்டடங்கள்ஓட்டல்கள்,மருத்துவமனைகள்மருந்துக் கடைகள் என்று அந்த இருபெரும் சாலைகளும் தம் முகத்தை அதி நாகரீகமாக ஒப்பனை செய்து கொண்டு வருகின்றன.

பார்க் ஷெராட்டன் ஓட்டல் எதிரே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவென்யூவில் அப்பொழுது விற்கப்பட்ட மனைகளின் குறைந்தபட்ச விஸ்தீரணம் எட்டு கிரவுண்ட். இப்பொழுது தி. நகரில் அரை கிரவுண்ட் தனி மனை கிடைப்பதே கூடக் கஷ்டம்.

இந்த நிலையில் இன்னமும் ஜி.என். செட்டி தெருவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பங்களா ஒன்று அப்படியே இருக்கிறது. சொத்து கைமாறவில்லை. மனை பிரிக்கப்படவில்லை. கட்டடமும் பொலிவுடன்வலுவுடன் இருக்கிறது. அதுதான் ஜெயின் கோயில் அருகே உள்ள தொழிலதிபர் மாமன் மாப்பிள்ளை குடும்பத்து பங்களா.

திரு. ரவி மாமன் அங்கு குடியிருந்தார். அவரது தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது கட்டடம் கட்ட ஆன செலவு சதுர அடிக்கு வெறும் எட்டணா மட்டுமே என்றார். மனைகட்டுமானம் உள்பட மாமன் மாப்பிள்ளை 1923-ல் செய்த செலவு ஐயாயிரம் ரூபாய். உத்தேசமாக ஒரு ஏக்கர் மனைக்கு இரண்டாயிரம் ரூபாய்ஐயாயிரம் சதுர அடி கட்டடம் கட்டச் செலவு மூவாயிரம் ரூபாய். நம்ப முடிகிறதாஆனால் இது உண்மை. இன்று (2008) அந்தப் பகுதியில் ஃப்ளாட் விற்பனை சதுர அடிக்கு இருபதாயிரம் ரூபாய் என்று உயர்ந்துவிட்டது.

இப்பொழுது மிக முக்கியமான கடைத்தெருவாகி விட்ட ரங்கநாதன் தெருவும் அந்தக் காலத்தில் ஒரு குடித்தனப் பகுதியே. எழுபதுகளில்தான் ரங்கநாதன் தெரு ஒரு கடைத் தெருவாக மாறும் அவலம் தொடங்கியது. அன்றைய மாம்பலத்தில்பாண்டி பஜார் பகுதியில்அப்போதைய ராஜகுமாரி தியேட்டர் எதிரில்ஒரு எண்ணெய் ஆட்டும் செக்கு இருந்தது.

இன்று தி. நகரின் பரபரப்பான பகுதி என்று தெற்கு உஸ்மான் ரோடினைச் சொல்லலாம். மிகவும் நெரிசலான பகுதி மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்லும் ரங்கநாதன் தெரு. அதற்குக் காரணம் கடைகளும் மற்றும் நடைபாதை வியாபாரிகளும்தான். அதுமட்டுமல்ல. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி வருபவர்களும் அங்கு செல்பவர்களும் இந்த இரண்டு தெருக்களையும் பயன்படுத்துகிறார்கள். இதெல்லாம் சமீப கால மாறுதல்கள். இனி ஏற்படக்கூடிய மாற்றம் குடியிருப்புப் பகுதிகள் வேகமாக வணிகப் பகுதியாக மாறுவதே. டி. நகர் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடும்பொழுது அது டிரேட் நகர் என்று மாறக்கூடிய அளவுக்கு இங்கே வணிகம் வளர்ந்து வருகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More