இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மதக் கலவரம் தேவையா ?
1. Pls Click Here - > http://onlinepj.com/kelvi- pathil-wmv-mp3-3gp/ mathakalavaram_thevaya/
தீவிரவாதத்தை ஒழிக்க நீங்கள் செய்தது என்ன?
2. Pls Click Here - > http://onlinepj.com/kelvi- pathil-wmv-mp3-3gp/ theeviravavatham_ozika_ neengal_seythathu-enna/
வதந்தியை பரப்பக்கூடாது
3. Pls Click Here - > http://onlinepj.com/Quran- pj-thamizakkam-thawheed/ vilakkangal/124-vathanthi- parapakootathu/
பொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும்
இந்தியர்களின் தங்க மோகம்
மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய வகையில் இந்தியர்களின் தங்க மோகம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2011 ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி அளவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பணவீக்கம் படு மோசமாக உள்ள நிலையிலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கத்தின் மீது பெருமளவில் செலவித்து வருகின்றனராம். இந்தியாவின் இறக்குமதி பொருட்களில், கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில், அதாவது 2 வது இடத்தில் தங்கம் உள்ளது. இது 2007-08 காலகட்டத்தில் 5வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்படி தங்கம் மீதான இந்தியர்களின் மோகத்தால், வளர்ச்சி விகிதம் கடும் பாதிப்பை சந்திக்கிறதாம். தங்கத்தில் பணத்தைப் பெருமளவில் முடக்கி வைப்பதால், பணப் புழக்கம் பெரும் முடக்கத்தை சந்திப்பதாக கூறுகிறது தங்க கவுன்சில். வங்கி லாக்கர்களில் எதற்கும் பயன்படாமல் தூங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகள், பிஸ்கட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அது கூறுகிறது. இதுகுறித்து எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அபீக் பரூவா கூறுகையில், தங்கத்தின் மீது செலவழிக்கப்படும் பணம் கிட்டத்தட்ட வீண் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மீதான பணப் புழக்கம், பிற செயல்களுக்குப் பயன்படாமல் முடங்கிப் போய் விடுவதால் தங்கத்திற்காக செலவழிப்பது என்பது கிட்டத்தட்ட வீன் செலவாகவே உள்ளது என்றார். உருப்படியான செலவுகளுக்குப் பணத்தை இறைப்பதற்குப் பதில் பெரும்பாலானவர்கள் தங்கத்திற்காக நிறைய செலவழிப்பதால் பிற நிதித் தேவைகளுக்கு போதிய பணம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. பிற நிதி சேமிப்புகள் தற்போது மக்களிடையே குறைந்து விட்டன. தங்கத்தின் மீது சேமிக்கவே அதிக விருப்பம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்குப் பெரிய அளவில் பலன் இல்லை என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்கிறார் கோடக் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்திரணில் பான். அவர் கூறுகையில், முன்பெல்லாம் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, வங்கியில் பணத்தை சேர்த்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேமிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது தங்கத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் இது ஜிடிபியின் வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றார். தேவையில்லாமல் நமது சேமிப்பு முடங்கி்ப போவதுதான் தங்கத்தின் மீது பணத்தைக் கொட்டுவதால் கிடைக்கும் லாபம் என்பது நிதி ஆலோசகர்களின் கணிப்பு. மக்களுக்கு திடீரென தங்கத்தின் மீது மோகம் பிறந்ததற்குக் காரணம் உலகளாவிய அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், அதிகரித்து வரும் தங்கம் விலையுமே காரணம் என்கிறார்கள். இப்போதே வாங்கி வைத்து விட்டால் நாளை தங்கம் விலை மேலும் கூடும்போது மதிப்பு அதிகரிக்கும் என ம்க்கள் கருதுகிறார்கள். இதனால்தான் தங்கம் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பெரும்பாலான தங்கத்தை நாம் வெளியிலிருந்துதான் இறக்குமதி செய்து வாங்கி விற்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் மீது பணத்தை முடக்குவதை வீடு போன்றவற்றை நாம் அதிகம் வாங்கினால் பணச் சுற்றாவது நிற்காமல் தொடரும் வாய்ப்புகள் உள்ளன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். அதிகரித்து வரும் தங்க முதலீடுகளால் இப்போது பெரியளவில் பாதிப்பு வரவில்லை என்றாலும் கூட,பிற முதலீடுகளில் மக்கள் நாட்டம் குறைந்து பெருமளவில் தங்க முதலீடுகள் அதிகரிக்கும்போது நிச்சயம் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். |
கலவரத்தால் வாழ்க்கையை இழந்தோம்
லண்டனில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டதாக கூறும் இந்தியத் தம்பதியினர், விரைவில் நாடு திரும்ப முடிவு செய்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள தொட்டென்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் துக்கன். கள்ளத் துப்பாக்கி விற்பதாகக் கூறி அவரை பிடிக்க முயன்ற போது, போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து லண்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வன்முறை வெடித்தது.
லண்டனில் உள்ள கிராய்டன் நகரிலும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அனைத்துக் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினர்.
கேரளத்தைச் சேர்ந்த லிஸ்லி ஜார்ஜ் (37), பினு மேத்யூ (40) என்ற இந்தத் தம்பதிகளுக்கு நடந்த கொடுமை குறித்து இதுவரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து இவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப முடிவெடுத்து விட்டனர்.
அந்தக் கொடூர இரவு வேளையில், தான் நர்ஸôக வேலைபார்க்கும் கிராய்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு புறப்படத் தயாரானார் லிஸ்லி. அப்போது திடீரென இவர்களது வீட்டில் நுழைந்த கலவரக் கும்பல் ஒன்று, இவரைப்பிடித்து இழுத்து சீருடையை கிழித்தெறிந்தது. கைப்பையை பிடுங்கி அதில் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மேத்யூ, தனது மனைவியை அவர்களிடமிருந்து காப்பாற்ற முயன்றபோது, கலவரக்காரர்களுடன் வந்த ஒரு பெண், இவரது முகத்தில் ஓங்கி குத்திவிட்டு அங்கிருந்து ஓடினாள். அவளைத் தொடர்ந்து கும்பலும் அந்த இடத்தை விட்டு அகன்றது. அதில் மேத்யூவுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அச்சத்தில் உறைந்து போன அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக அருகே அவர்கள் நடத்தி வந்த உணவகம் முற்றிலுமாக சூறையாடப்பட்டது தெரியவந்தது. எஞ்சிய பொருள்களும் அடித்து நொறுக்கப்பட்டு கிடந்தன.
செய்வதறியாது திகைத்துப் போன இருவரும், கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
இது குறித்து மாத்யூ கூறுகையில், நாங்கள் கேரளம் திரும்ப முடிவு செய்துள்ளோம். லண்டனில் இவ்வாறு நடக்கும் என நாங்கள் நினைக்கவே இல்லை.
அவர்களின் இத்தகைய செயல்களால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இருந்தும் அவர்கள் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அப்படி நடந்து கொண்டார்கள். பாடுபட்டு சேர்த்த அனைத்தையும் அவர்கள் நாசமாக்கிவிட்டனர் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்ததை விவரித்த லிஸ்ஸி, எனது பணிச்சீருடையை கிழித்து என்னை அரை நிர்வாணமாக்கிவிட்டனர். அத்துடன் விடாமல் அதே நிலையில் என்னை இழுத்துக்கொண்டு போய் நடுத்தெருவில் நிற்கவைத்தனர். கொடூர மிருகங்கள் போல அவர்களின் செயல் இருந்தது.
எனது திருமணச் சங்கிலி உள்பட அனைத்தையும் இழந்து விட்டோம். அந்த பயங்கர இரவுக்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. குடும்பத்தை நடத்த பணம் வேண்டும். அதற்காகவாவது வேலைக்கு போக நினைக்கிறேன். ஆனால் அதுவும் முடியவில்லை என்றார்.
மாத்யூ கூறுகையில், கடைக்கு முன் நிறுத்தியிருந்த எங்கள் வேன் ஒன்றையும் தீ வைத்து எரித்துவிட்டனர். அனைத்தும் போய்விட்டது. காப்பீடு மூலம் ஏதோ கொஞ்சம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நான் இழந்தவற்றுக்காக யாரிடமும் எந்தவித நஷ்டஈடும் கேட்கப்போவதில்லை என்றார் திட்டவட்டமாக. சம்பவம் நடந்த அந்த இரவு, மீண்டும் மீண்டும் நினைவலைகளில் சுழல்வதால் இரவு வேளைகளை பேசியே கழிப்பதாக விரக்தியுடன் கூறுகின்றனர் இந்தத் தம்பதிகள்.
|





0 comments:
Post a Comment