| திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கிராமம் தோப்பு தெருவை சேர்ந்த ரஜப் என்பவரின் மகள் ஷலிமா (வயது 24). இவர் தாய் மைமீன், தம்பி ஷெரீப்புடன் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த வரதனின் மகன் கண்ணன் (26). நெசவு தொழிலாளி. கண்ணனுக்கு தாய், தந்தை கிடையாது. உறவினர் ஓய்வு பெற்ற ராணுவவீரர் அரி கோவிந்தன் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். ஷலீமாவும், கண்ணனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் ஷலீமா கர்ப்பமானார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷலீமா கூறிய தற்கு கண்ணன் மறுத்து வந்துள்ளார். இதனால் ஷலீமா வயிற்றில் குழந்தை இருப்பதை மறைத்து கட்டியிருப்பதாக பெற்றோரிடம் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் ஷலீமாவிற்கு கடந்த 4 ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து ஷலீமா பெற்றோருடன் சென்று ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் தாஹீரா இருதரப்பினரையும் அழைத்து பேசி னார். இதில் கண்ணன், ஷலீமாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். அலுத்தொடர்ந்து இந்து முறைப்படி வேம்புலியம்மன் கோவிலில் ஷலீமா கழுத்தில் கண்ணன் தாலி கட்டி கைகுழந்தையுடன் மனைவியாக்கி கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. நக்கீரன் |





0 comments:
Post a Comment