Monday, September 12, 2011

ஒபாமா, ஜார்ஜ் புஷ் பங்கேற்பு 9/11 அமெரிக்க தாக்குதல் 10வது நினைவுதினம் அனுசரிப்பு


நியூயார்க் : அமெரிக்காவில் உலக வர்த்தக மைய இரட்டை கட்டிட தாக்குதலின் 10வது ஆண்டு நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் Ôகிரவுண்ட் ஜீரோÕ என்ற இடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது அல்கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி வந்து மோதி தகர்த்தனர். இந்த தாக்குதலில் 110 மாடி கட்டிடம் தரைமட்டமானதுடன் சுமார் 3000 பேர் பலியாயினர். இந்த கோர தாக்குதலின் 10வது ஆண்டு நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. 

இந்த தாக்குதலுக்கு காரணமான அல்கய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கடந்த மே மாதம் கொல்லப்பட்டார். எனவே, இதற்கு பழிவாங்கும் வகையில் 10வது நினைவு தினத்தன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த அல்கய்தா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக அமெரிக்க போலி விசாவுடன் 2 பேர் உட்பட 3 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியானதால் அமெரிக்கா முழுவதும் பீதி நிலவியது. 

இதையடுத்து, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் மன்ஹாட்டன் நகரங்களில் நுழையும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தீவிரவாத தடுப்பு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நியூயார்க் நகரின் கிரவுண்ட் ஜீரோ பகுதியில், தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு நகரங்களில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. 

வெளிநாடுகளிலும் அஞ்சலி

இங்கிலாந்து ஆஸ்திரேரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் 9/11 நினைவுதினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம், அஞ்சலி மற்றும் பிரர்த்தனைகள் நடைபெற்றன. உலகின் எந்த இடத்திலும் இதுபோன்ற தாக்குதல் நடக்க இனி அனுமதிக்கக் கூடாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில், ÔÔதாக்குதல் நடைபெற்ற அன்று எனது மனைவி சமந்தா நியூயார்க்கில் இருந்தார். 

உடனடியாக அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது, போன் எடுக்கவே இல்லை. எனவே, இந்த தாக்குதலில் அவரும் இறந்திருப்பார் என நினைத்தேன். 5 மணி நேரம் கழித்து அவரே தொடர்பு கொண்டு பத்திரமாக இருப்பதாகக் கூறினார். அந்த நேரத்தில் எனது மனநிலை எப்படி இருந்தது என்பதை இப்போது நினைத்தாலும் பதற்றமாக உள்ளதுÕÕ என்றார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More