skip to main |
skip to sidebar
11:19 PM
Unknown
சென்னை: அரக்கோணம் அருகே, சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், பலர் பலியானதாக அஞ்சப்படுகிறது;200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அரக்கோணத்திலிருந்து, நேற்று இரவு, வேலூர் கன்ட்டோன்மென்டிற்கு சென்ற பயணிகள் ரயில், சித்தேரி அருகே, சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை, பீச்சிலிருந்து, வேலூர் சென்ற மற்றொரு ரயில், நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில், பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்திற்கு, சென்னையிலிருந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரயில் விபத்தால், சென்னை சென்ட்ரலிலிருந்து காட்பாடி வழியாக, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை மற்றும் பெங்களூர் செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
0 comments:
Post a Comment