Monday, September 12, 2011

செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயம்

US Troopsகாபூல்: செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலை உலகெங்கும் உள்ள அமெரிக்கர்கள் நினைவு கூறும் இந்தநாளில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 50 பேர் உள்பட நேட்டோ படையினர் 90 பேர் படுகாயமடைந்தனர்.

நேட்டோ படையின் ராணுவச் சாவடி மீது லாரி மூலம் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 90 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 50 பேர் அமெரிக்கர்கள்.

இதை நாங்கள்தான் நடத்தினோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். செப்டமபர் 11 நினைவு நாளையொட்டி அமெரிக்காவே சோகமாக உள்ள நேரத்தில், தலிபான்கள் நடத்தியுள்ள தாக்குதலில் பெருமளவிலான அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More