Monday, September 12, 2011

10:11.

நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.

4:145நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.

பெண் வேஷம் இடும் ஆண்களே!

இன்று பேஷ்புக்கில் முஸ்லிம் பெண்களின் பெயரில் பொய்யான profile களை உருவாக்கி தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெட வைக்கும் ஒரு கும்பல் நம்மில் அலைந்து கொண்டுவருகின்றது.
நண்பர்களே நீங்கள் செய்யும் இந்த விடயத்தின் பிபரீதம் தெரியாமல் உள்ளீர்கள். இதனால் தற்பான கோணத்தில் அந்நிய சமுகம் நமது பெண்களை எடைபோட்டுள்ளனர். மேலும் பலர் உங்களது பொழுது போக்கான கருத்துகளுக்கு மயங்கி பெண் என நினைத்து தங்களையும் பாவத்தின் பால் சேர்த்துக்கொள்கின்றனர். மேலும் பலர் இவ்வண்ணம் நம் முஸ்லிம் பெண்களுடன் தன்னை ஒரு பெண்ணாக அறிமுகப்படுத்தி தற்பானவற்றை கதைக்கிறார்கள். இந்த பாவங்களை சுமக்கவா வேண்டும்.
அருவேருப்பானவற்றை எல்லாம் Tag பண்ணுகிறார்கள் . இருந்தாப்புல பேஷ்புக் இக்கு வரும் முஸ்லிம் பெண்களினதும், Tag இணை remove பண்ண தெரியாத பெண்களினதும் Wall இல் இவை இருப்பதால் பார்க்கும் அந்நியர்கள் நம் முஸ்லிம் பெண்களை எப்படி எடை போடுவார்கள். ஆகவே உங்களது சகோதரிகளின் கௌரவத்தை பாதுகாக்கும் விதத்தில் நடந்து கொள்ளுங்கள்.
இதனால் தினமும் உங்கள் பாவ ஏடு அதிகருத்து உங்கள் நல்ல அமல்கள் எல்லாம் வீனாகிப்போய்விடும்.
எனவே போலி profile களை Deactivate பண்ணி உண்மையான முஸ்லிமாகுங்கள்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More