Thursday, August 18, 2011

தர்ம பெருநாளே...


அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஈமானின் சிந்தனைக்கொண்டு
இல்லறங்களில் இனிதாக
ஈகை பெருநாளை கொண்டாடுவோம்
உறவினர்களுடன் உறவாடி
உள்ளங்களை உற்சாகப்படுத்தி
எல்லோருக்கும் நல்லது செய்வோம் என்றெண்ணி
ஏக இறைவனின் திpருமறையை
ஐய உணர்வுடன்
தினம் ஒரு மனதுடன்
ஓதுவோம்;.. ஓதி வருவோம்.

உறவுக்கும் திக்கற்றவருக்கும்
இரக்கம் காட்டி
நம்பிக்கை கொண்டு
நற் செயல்கள் செய்வதற்கே
அல்லாஹூதலா நற்கூலி கொடுக்கிறான்
என்ற நம்பிக்கைக்கொண்டு
''ஈதுல் பித்ரு'' அள்ளிக் கொடுப்போம்
தர்ம பெருநாளில்
மறு உலகிற்கு இங்கே நல்வழி செய்வோம்.

அல்லாஹ்விற்கு பயந்தும்
அவனுடைய தூதருக்கும்
கீழ்ப்படிந்து நடந்து கொள்வதால்
மறுமையை மறக்க மாட்டோம்
பகைவனையும் எதிரியையும்
நண்பனாக்கி தோள் கொடுக்கும்
எங்கள் புனித மார்க்கம்
அது தான் இஸ்லாம் மார்க்கம்
என்றும் இப்பூமியில்
நிலைத்து நிற்கும் இனிய மார்க்கம்...

முத்துப்பேட்டை. அபு ஆஃப்ரின்

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More