Friday, August 19, 2011

நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்:



மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால்


5:89 "உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.64 (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்."

வசனத்தில் கூறப்படும் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். சிலர் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யும் எண்ணமின்றி வாய் தவறி 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக' எனக் கூறி விடுவதுண்டு. சத்தியம் செய்யும் எண்ணமில்லாமல் அந்தச் சொல்லைக் கூறியதற்காக அல்லாஹ் தண்டிக்க மாட்டான்.பிறரை ஏமாற்றுவதற்காகவோ, தம்மைக் காக்கும் கேடயமாகவோ 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக' என்று கூறுவதை இவ்வசனம்


(2:225) "உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ்உங்களைத் தண்டிக்க மாட்டான்உங்கள் உள்ளங்கள் உறுதிசெய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான்.அல்லாஹ் மன்னிப்பவன்சகிப்புத் தன்மை மிக்கவன்"

அனுமதிப்பதாகக் கருதக் கூடாது. ஏனெனில் இவ்வாறு செய்வது குற்றம் என வேறு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

2:224"நன்மை செய்வதற்கும், (இறைவனைஅஞ்சுவதற்கும்,மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள்சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்!அல்லாஹ் செவியுறுபவன்அறிந்தவன்",

3:77"அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும்தமதுசத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்குமறுமையில் எந்த நற்பேறும் இல்லை.64 கியாமத் நாளில்1அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான்அவர்களைப்பார்க்கவும் மாட்டான்அவர்களைத் தூய்மைப் படுத்தவும்மாட்டான்அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.",

16:91"நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தைநிறைவேற்றுங்கள்உங்கள் மீது அல்லாஹ்வைப்பொறுப்பாளனாக்கிசத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதைமுறித்து விடாதீர்கள்நீங்கள் செய்பவற்றை அல்லாஹ்அறிவான்.",
  
16:92"உறுதியாக நூற்றுபின்னர் நூற்றதைத் துண்டு துண்டாகஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்ஒரு சமுதாயத்தை விடஇன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளதுஎன்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப்பயன்படுத்தாதீர்கள்இதன் மூலம் அல்லாஹ் உங்களைச்சோதிக்கிறான்நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத்நாளில்1அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.",

16:94 "உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச்செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய் விடும்அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்ததால்தீங்கைச் சுவைப்பீர்கள்உங்களுக்குக் கடும் வேதனைகிடைக்கும்." ,

58:16 "அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக்கொண்டனர்.அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள்.இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.",

63:2"அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிஅல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள்செய்து கொண்டிருப்பது கெட்டது.")

வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றவோ, தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வருவதைத் தவிர்ப்பதற் காகவோ அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்துவோர் மேற்கண்ட வசனங்களைப் பார்த்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் பெயரைப் பயன் படுத்தி அவனை சாட்சியாக்கிப் பேசும் போது பொய் சொல்வதும், அல்லாஹ் வின் பெயரால் அளித்த வாக்கை நிறை வேற்றாமல் இருப்பதும் கடும் குற்றமாகும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More