துபாய் : துபாயில் ரமலான் மாதத்தில் சுற்றுலாப் பயணியாக வருகை புரிந்த ஜெர்மனியைச் சேர்ந்த டேனியல் தெரிவிப்பதாவது :
வியட்நாம், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் துபாய் வருகை புரிந்தவுடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் உணர்த்துகிறது.
கடுமையான வெயிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது தன்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.
இரவு நேரங்களில் அனைவரும் சிறப்புத் தொழுகைகளை தொழுது வருவது, சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் போட்டிகள் நடந்து வருவது, பகலில் நோன்பு வைக்காத பிற சமயத்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தன்னை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு பரிமாறப்படுவதையே பார்த்து வந்த தனக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தினமும் 3000 பேருக்கு மேல் வழங்கி வருவது ஒரு வித்தியாசமான அனுபவம். மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள்.
நோன்பு திறப்பதற்கு முன்பு பொது இடத்தில் அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பதன் காரணமாக தமிழகத்து நோன்புக் கஞ்சியினை பார்சல் வாங்கிக் கொண்டு வாழ்த்துக் கூறி விடைபெற்றார் ஜெர்மானிய சுற்றுலாப் பயணி டேனியல்.
0 comments:
Post a Comment