Tuesday, August 16, 2011

உடலுக்கு வெளியே இதயத்தைக் கொண்ட ரஷ்ய சிறுமி..!!!

 

உடலுக்கு வெளிப்புறத்தில் இதயம் ஒட்டியிருந்த நிலையில் பிறந்த இரண்டு வயது சிறுமியொருவர் ரஷ்யாவில் வாழ்ந்து வருகிறாள்.   இந்த உடற்கோளாறு எக்டோபியர் கோர்டிஸ் எனக் குறிப்பிடப்படுகிறது. 80 லட்சம் பேர்களில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேற்படி சிறுமி ரஷ்யாவின் நொவோரோஸிஸ்க் பகுதியில் வசித்து வருகிறாள். இக்குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி தேவைப்படுவதாக இக் குழந்தையின் தாய் மிஹிடிரியன்ட்  தெரிவித்துள்ளார.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இக்குழந்தையின் இதயத்தை தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்கு 5 வகையான  சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கு சுமார் 20,000 ஸ்ரேலிங் பவுண்களை திரட்ட வேண்டியுள்ளது என்று மிஹிடிரியன்ட் தெரிவித்துள்ளார். உண்மையில் இது மிகவும் கடினமான காரியம். நாங்கள பண வசதிக் கொண்டவர்கள் இல்லை. 


அதனால் நாம் எப்படி அவ்வளவு தொகை பணத்தை தேட முடியும்? என்று கவலையுடன் கேட்கிறார் அவர். அவளது இதயத்தை  உள்ளே வைப்பதற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு மில்லியன் கணக்கிலான பணம் செலவாகும் என்றும் கூறுகின்றனர்.

இப்போது நாங்கள் அவ்வளவு தொகையான பணத்தை தேடாவிட்டால் எமது குழந்தையின் அடுத்த பிறந்ததினத்தை பார்க்க முடியாது என்று மிஹிடிரியன்ட் தெரிவித்துள்ளார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More