அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ராபர்ட் ஸ்பென்சர், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களில் முதன்மையானவர். இவர் மற்றும் இவரின் கூட்டாளிகளின் இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களில் இருந்து தான் (பெரும்பாலான) நம்மூர் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை கொண்டு வருவார்கள். அப்படிப்பட்டவர், சமீபத்தில் FOX ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ஆச்சர்யமளிக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
"இஸ்லாம் குறித்து பாசிடிவ்வாக எதையாவது நினைக்கின்றீர்களா" என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் Colmes-இன் கேள்விக்கு,"இஸ்லாம் பெரும்பாலான மக்களை ஒழுக்கசீலர்களாக மாற்றுகின்றது" என்று குறிப்பிட்டுள்ளார் ராபர்ட் ஸ்பென்சர்...அட...A true Stunner....அல்ஹம்துலில்லாஹ்.
அந்த உரையாடல் இதோ...
Colmes: Robert, excuse me, is there anything positive about Islam you could say?
Spencer: Islam makes a lot of people be very moral and upright and live fine lives.
Colmes: That’s good right? And wouldn’t that be true of most Muslims?
Spencer: I would certainly say so, yeah, I never have denied it.
சும்மாகவே "லூன் வாட்ச்" தளத்தினர் (ராபர்ட் ஸ்பென்சர் முதலான) இஸ்லாமிய எதிர்ப்பாளர்களை போட்டு புரட்டி எடுப்பார்கள். இப்படி ஒரு செய்தி கிடைத்தால் சும்மா விடுவார்களா??..மிக சூப்பராக ஒரு பதிவை ரெடி செய்து வெளியிட்டு விட்டார்கள். அதில், ராபர்ட் ஸ்பென்சர், இஸ்லாம் குறித்து முன்பு என்ன சொன்னார், இப்போது அவருக்கு ஏற்பட்டுள்ள மனமாற்றம் என்று தங்களுக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் எழுதி அசத்தியிருக்கின்றார்கள்.
"லூன் வாட்ச்" தளத்தின் அந்த பதிவை காண (மற்றும் ராபர்ட் ஸ்பென்சர் பேட்டி வீடியோவை காண),
http://www.facebook.com/l/
ராபர்ட் ஸ்பென்சர் மாற்றும் லூன் வாட்ச் தளம் குறித்த என்னுடைய பதிவை காண,
http://www.facebook.com/l/
இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கு நேர்வழியை இறைவன் காட்டுவானாக...ஆமீன்.
லூன் வாட்ச் தளத்தினர் மேலும் சிறப்பாக செயல்பட இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்..
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ





0 comments:
Post a Comment