Thursday, August 18, 2011

கண்ணியமிக்க சகாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை


அல்-ஹதீஸ்” என்பது அண்ணல் (நபி) அவர்கள்

சொன்னவை (கவ்லீ)
செய்தவை (பிஃலீ)
அங்கீகரித்தவை (தக்ரீரி)

இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும்.
இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும்.

ஹதீஸ் இரு வகைப்படும்

அவை:

1. ஹதீஸ் குத்ஸீ:

இறைவனின் கருத்தை ஜிப்ரீல் (அலை) தம் சொல்லால் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாகும்.

2. ஹதீஸ் நபவீ:

அண்ணல் நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் ஹதீஸ் நபவீ என்றும் (ஹதீஸ் கைர குத்ஸீ என்றும்) வழங்கப்படும்.

முதலில் ஹதீஸ்கள் ஏன் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை?

இறைவசனற்களோடு நபிமொழிகள் ஒன்றறக் கலந்து விடக்கூடாது என்பதற்காகவும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் பரிகாரம் கூறக்கூடிய அல்லாஹ்வின் திருத்தூதர் மக்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்ததாலும், ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பதிந்திருந்தாலும் ஆரம்பகாலத்தில் ஹதீஸ்கள் நூல்வடிவில் தொகுக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

பின்னர் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

நபிகள் நாயகத்தின் மறைவிற்க்குப் பிறகு இலட்சக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்த நாயகத்தோழர்கள் மார்க்கப்பிரச்சாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணமாகிக் கெண்டிருந்தார்கள். பலர் இஸ்லாமியப் போர்களில் கலந்து கொண்டு இறப்பெய்திக் கொண்டுமிருந்தார்கள். அதனால் நபிமொழிகள் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

“நான் சொல்லாதவற்றை சொன்னதாக யார் சொல்கிறார்களோ அவர்கள் தங்கள் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.”

என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையால் அபூபக்கரு (ரலி), உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்கள் ஹதீஸ்களை தொகுக்கும் முயற்சியில் முனையவில்லை. பின்னர் இதன் தேவை உணரப்பட்டதும் பல நல்லோர் இதனை தொகுப்பதில் முயற்ச்சிகளை மேற்கொண்டனர்.
இத்துறையில் முதன் முதலில் கவனம் செலுத்தி ஆவனை செய்தவர் இரண்டாவத உமர் என அழைக்கப்படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) ஆவார்.

ஹிஜ்ரி 100 முதல் 200 வரை ஹதீஸ் நூல்கள்

கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆணைப்படி அன்று மதீனாவின் கவர்னராக இருந்த ஆபூபக்கர் இப்னு ஹஸம் (ரஹ்) அப்பணியை மேற்கொண்டனர். இமாம்களான இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, போன்றோர் அப்பணியில் ஈடுபட்டு ஹிஜ்ரி 100 முதல் 200 வறை சிறிதும் பெரிதுமாக சுமார் 20 ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்.
அதன் பிறகு இமாம் மாலிக், இமாம் ஷாபியீ, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்,ஆகியோர் முறையே முவத்தா, முஸ்னத் ஷாஃபியீ, முஸ்னத் அஹ்மத் போன்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்
  
பொற்காலமும் ஆறு திரட்டுகளும்

அதன் பிறகு ஸிஹாஹ் ஸித்தா என்னும் ஆறு திரட்டுகளை உருவாக்கிய இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூ தாவூது, இமாம் திர்மிதீ, இமாம் நஸயீ, இமாம் இப்னு மாஜா ஆகியோர் இப் பெரும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் காலமே ஹதீஸ் கலையின் பொற்காலமாகும்.
அரசியல் காரணங்களுக்காகவும், இஸ்லாத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டுமென்ற குரோத நோக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பொய்யான ஹதீஸ்களை புனைந்து உண்மையான ஹதீஸ்களுடன் கலந்துவிடப்பட்டி ருந்ததால் பொய்யான ஹதீஸ்களில் இருந்து உண்மையான ஹதீஸூகளை தரம் பிரிப்பது இவர்களுக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்தது.
நம் முன்னோர்கள் ஹதீஸ்களை ஒருவரிடம் கேட்டார்கள், உடனே எழுதிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற அளவில் ஹதீஸ்கள் தொகுக்கப்படவில்லை.
உதாரணமாக: நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாக கேட்டவர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? என்று கடைசிவரை அறிவித்தவர் யார்? அவர்களின் நினைவாற்றல், நல்லொழுக்கம், பிறப்பு, இறப்பு, வரலாறு ஆகியவற்றை ஐயமறத் தெரிந்து தெளிந்து தேர்ந்த பின்னரே ஒரு ஹதீஸை தேர்ந்தெடுக்கப்படும்.
இவ்வாறு பல்லாண்டுகள் ஆயிரக்கணக்கான மைல்கள் கால்நடையாகப் பயணம் செய்து பல இலட்சம் ஹதீஸ்களை சேகரித்து தங்களின் கடினமான விதிகளால் அவற்றிலிருந்து சில ஆயிரம் ஹதீஸ்களை தேர்வு செய்தனர்.

இமாம் தேர்வு செய்த ஹதீஸ்கள்

(வாழ்ந்தஹிஜ்ரி ஆண்டு திரட்டியவை தேர்ந்தவை)

01ஸஹீஹூல் புஹாரி.இமாம் முஹம்மது இஸ்மாயீல் புஹாரி(ரஹ்) 194-256 . திரட்டியவை – 600,000. தேர்ந்தவை-7563 ஹதீஸ்கள்.

2 ஸஹீஹ் முஸ்லிம்.இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) 204-261 திரட்டியவை-300,000 . தேர்ந்தவை-7563 ஹதீஸ்கள்.

03 ஸூனனு அபீதாவூது. இமாம் அபூ தாவூது சுலைமான் அஸ்ஸஜஸ்தானீ 202-275. திரட்டியவை-500,000 . தேர்ந்தவை-5274 ஹதீஸ்கள்.

04 ஜாமிவுத் திர்மிதீ. இமாம் அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ(ரஹ்) 200-279 . தேர்நதவை- 3956 ஹதீஸ்கள்.

05 ஸூனனுந் நஸாயீ. இமாம் அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ 215-303 . தேர்ந்தவை-5761 ஹதீஸ்கள்.

06 ஸீனனு இப்னுமாஜா இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் 209-273. – தேர்ந்தவை-4341 ஹதீஸ்கள்.
( ஸிஹாஹ் ஸித்தாவின் மொத்த ஹதீஸ்கள் – 34,458 ஹதிஸ்கள்)

இவையடுத்து முக்கியஇடம் பெறுவது-

முஸ்னது அஹ்மது : இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) 164-241 திரட்டியவை-1000000 . தேர்ந்தவை-27,999 ஹதீஸ்கள்.
அதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறவது முஸ்னது அஹ்மது என்ற நூல் தான்.
இவர்களை அடுத்து இமாம்கள் தஹாவீ, தாரகுத்னீ, தப்ரானி, பைஹகீ ஹாக்கிம், இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, இப்னு அவானா, இப்னு ஜக்கன் ஆகியோரும் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் பாடுபட்டனர்.

ஹதீஸ்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன

1. ஸஹீஹ்: உண்மையானது (ஹதீஸின் உண்மைத்தன்மைப்பற்றி
ஏகோபித்த அபிப்பிராயத்தைபெற்றவை)

2. ளயீஃப் : பலகினமானது (ஒரு ஹதீஸின் கருத்து பற்றியோ, அதை
அறிவிப்பவர் தகுதி பற்றியோ ஐயம் ஏற்படின் அது ளயீஃப் எனப்படும்)

3. மவ்லூஃ: பொய்யானது (புனையப்பட்டது)
இவைதவிர,

முதவாதிரா,
மஷ்ஹூரா,
ஆஹாத்

எனவும் அறிவிப்பாளர்களின் தொடர் வரிசை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை ஹல்ரத் அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.
1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் 07 பேர்

(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் ஹதீஸ்களின் எண்ணிக்கையும்)

01 ஹல்ரத் அபூ ஹூரைரா (ரலி),                    5374  ஹதீஸ்கள்.

02 ஹல்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி),     630       ”  

03 ஹல்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி),           2286      ”

04 ஹல்ரத் ஆயிஷ்ா ஸித்தீக்கா (ரலி) ,           2210      ”

05 ஹல்ரத் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி),    1660     ”

06 ஹல்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி),   1540     ”

07 ஹல்ரத் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) ,               1170  ஹதீஸ்கள்.

1000 ஹதீஸ்களுக்கு குறைவாக அறிவித்தவர்கள்
(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் ஹதீஸ்களின் எண்ணிக்கையும்)

01 ஹல்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலி), 848  ஹதீஸ்கள். 

02 ஹல்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ்(ரலி) 700 ”

03 ஹல்ரத் உமர் இப்னு கத்தாப்(ரலி),                      537      ”

04 ஹல்ரத் அலீ இப்னு அபீதாலிப் (ரலி,                   536      ”

05 ஹல்ரத் அபூதர்ருல் கிஃபாரி(ரலி),                        281       ”

06 ஹல்ரத் ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி),          270       ”

07 ஹல்ரத் முஆது இப்னு ஜபல்(ரலி)                       200       ”

08 ஹல்ரத் அபூதர்தாஃ(ரலி),                                     179       ”

09 ஹல்ரத் உத்மான் இப்னு அஃப்ஃபான்(ரலி),           147       ”

10 ஹல்ரத் அபூபக்கர்(ரலி)                                          142       ”

தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் பிறப்பு இறப்பு ஆண்டும்)

01 ஹல்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) (ஹி 94)

02 ஹல்ரத் நாஃபிஃ மௌலா இப்னு உமர்(ரஹ்) (ஹி-117)

03 ஹல்ரத் முஹம்மது இப்னு ஸீரீன்(ரஹ்) (ஹி-110)

04 ஹல்ரத் இப்னு ஷிஹாபுஸ் ஸூஹ்ரி (ரஹ்) (ஹி-123)

05 ஹல்ரத் ஸயீது இப்னு ஜூபைர்(ரஹ்) (ஹி95)

06 ஹல்ரத் இமாம் அபூ ஹனீபா(ரஹ்) (ஹி270-55)

தாபிஉத் தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் பிறப்பு இறப்பு ஆண்டும்)

01 ஹல்ரத் இமாம் மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) ( 93-179)

02 ஹல்ரத் இமாம் ஷாபியீ(ரஹ்)  (ஹி 150-204)

03 ஹல்ரத் இமாம் ஸூஃப்யானுத்தவ்ரீ;(ரஹ்) (ஹி161)

04 ஹல்ரத் இமாம் ஸூஃப்யானுப்னு உயைனா (ரஹ்) ((ஹி198)

05 ஹல்ரத் இமாம் அல்லைத் இப்னு ஸஃது(ரஹ்)  (ஹி 94-175)

ஸஹாபிய்யா பெண்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்

அ. (ஹதீஸ் அறிவிப்பாளர்களில்
பெருமானாரின் மனைவியர்)

1 ஹல்ரத் அன்னை ஆயிஷா(ரலி)                 2210 ஹதீஸ்கள்

02ஹல்ரத் அன்னை உம்மு ஸலமா(ரலி)       387         ”

03 ஹல்ரத் அன்னை உம்மு ஹபீபா(ரலி)         65         ”

04 ஹல்ரத் அன்னை ஹப்ஸா(ரலி)                  60         ”

05 ஹல்ரத் அன்னை மைமூனா(ரலி)                46          ”

06 ஹல்ரத் அன்னை ஜைனப் பின்த் ஜக்ஷ்(ரலி) 11         ”

07 ஹல்ரத் அன்னை ஸஃபிய்யா(ரலி)                10         ”

08 ஹல்ரத் அன்னை ஸவ்தா(ரலி)                       5         ”

ஆ. ஏனையத்தோழியர்

09 ஹல்ரத் அஸ்மா பின்த் யஸீத்(ரலி)                 81     ”

10 ஹல்ரத் அஸ்மா பின்த் அபீபக்கர்(ரலி)             58     ”

11 ஹல்ரத் ஃபாத்திமா பின்த் அஸத்(அலியின் தாயார்) (ரலி) 46 ”

12 ஹல்ரத் உம்முஹானி பின்த் அபீ தாலிப்(ரலி)  46    ”

13 ஹல்ரத் உம்மு ஃபள்ல் (அப்பாஸ் (ரலி) மனைவி) (ரலி) 30  ”

14 ஹல்ரத் அர்ருபைஃ பின்த் முஅவ்வத்(ரலி)         21    ”

15 ஹல்ரத் கவ்லா பின்த் ஹக்கீம்(ரலி) 15

16 ஹல்ரத் உம்மு ஸூலைம் (அனஸ் (ரலி) தாயார்)(ரலி) 14  ”

17 ஹல்ரத் புஸ்ரா பின்த் ஸஃ;ப்வான்(ரலி)                11  ”

18 ஹல்ரத் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி)             7   ”

19 ஹல்ரத் உம்முல் அலா அல் அன்ஸாரியா(ரலி)     6   ”

இ.மற்றும் சிலர்

21 உம்முல் ஹக்கம் பின்த் அபீஸூஃப்யான்(ரலி)

22 அஷ்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்(ரலி)

23 உம்மு குல்தூம் பின்த் அபீபக்கர்(ரலி)

24 ஹிந்து பின்த்உத்பா இப்னு ரபீஆ(ரலி)

25 உமைமா பின்த் ரக்கீகா(ரலி)

26 பாத்திமா பின்த் ஹூஸைன்(ரலி)இன்னும் ஏராளமானோர் நபி மொழிகளை அறிவித்துள்ளனர்.

பின் வரும் நபிமணியின் எச்சரிக்கையின் விளைவால் எழுந்த அச்சத்தினால் பலர் ஹதீஸ்களை தொகுப்பதையும் அறிவிப்பதையும் தவிர்த்தனர். நபிகள் நாயகம் கூறினார்கள்:
‘என்னைபற்றி நான் கூறியதாக யார் பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக்கொள்ளட்டும்.(அவன் போய் சேரும் இடம் நரகமாகும்)’

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More