Monday, August 29, 2011

ஆறு நோன்புகள்


ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்: முஸ்லிம் 1984
ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஆறு நாட்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுவதால் ஷவ்வால் மாதத் துவக்கத்திலேயே இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

ரமளானைத் தொடர்ந்து என்பதற்கு இவர்கள் கூறுவது போன்று பொருள் கொண்டால் பெருநாள் தினத்திலிருந்து நோன்பு நோற்க வேண்டும். இது தான் ரமளானைத் தொடர்ந்து வரும் முதல் நாள். ஆனால் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே ரமளானுக்குப் பின் என்பது தான் இதற்குச் சரியான விளக்கமாக இருக்க முடியும். தொடர்ந்து என்று மொழியாக்கம் செய்த இடத்தில் அத்பஅ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ரமளானுக்கு முன்னால் இல்லாமல் ரமளானுக்குப் பின்னால் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஷவ்வால் என்று குறிப்பிட்டிருப்பதால் அம்மாதத்தில் வசதியான நாட்களில்நோற்று விட வேண்டும்.

 

பி.ஜே யின் 2011 ரமளான் தொடர் சொற்பொழிவு நேரடி ஒளிபரப்புகள் 
இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு ரமளான் மாதத்தில் ”தவறான வாதங்களும் தக்க பதில்களும்என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நமது
'Live webcast' on  www.onlinepj.com & www.tntj.net
இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 
நேரம்: இந்திய நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை
பாருங்கள் பார்க்கச் செய்யுங்கள்.. 
இன்ஷா அல்லாஹ் ரமளான் முழுவதும்         மெகா டிவியில்   காலை  3.30  முதல்  5.00  மணிரை!


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More