Tuesday, July 26, 2011

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்



உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்



ஆரோக்கியமான உடலில் நோய் நெருங்காது என்பது பழமொழி. அந்த வகையில் நம் உடலை கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுவது தான் உடற்பயிற்சி.
உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல நேரம் இல்லையா இனி கவலை வேண்டாம்இருக்கும் இடத்தில் இருந்து உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது.
மனித உடலை சரியான முறையில் உடற்பயிற்சி மூலம் பழக்கப்படுத்தி மிடுக்கான உடலையும் நோய் இல்லாத வாழ்வையும் பெறலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இருந்தும் நாம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததற்கு காரணம் நேரமின்மை தான். ஆனால் இனி நேரம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆம் எப்போது வேண்டுமானாலும் உடற்பயிற்சி பற்றிய தகவல்களை நமக்கு வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று உடற்பயிற்சியின் அடிப்படை வீடியோவை ஒவ்வொன்றாக இலவசமாக பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும் தனித்தனி உடற்பயிற்சியை நமக்கு அளிப்பதாக உள்ளது.
இந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எத்தனை நிமிடங்கள் செய்ய வேண்டும்இந்த பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன் என்ன என்பது வரை அத்தனை தகவல்களையும் துல்லியமாக கொடுக்கின்றனர்.
குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும்ஒல்லியாக இருப்பவர்கள் சற்று குண்டாகவும் எந்த விதமான உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பதைக்கூட எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு ஒய்வு நேரம் கிடைக்கும் போது இது போன்ற வீடியோக்களை பார்த்து அடிப்படை உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களும் தங்கள் உடலை அழகாக வைத்துக்கொள்ள பல உடற்பயிற்சிகளையும் இத்தளம் வீடியோவுடன் சொல்லிக் கொடுக்கிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More