Tuesday, July 26, 2011

இப்படியும் ஏமாற்றுவார்கள் ! விழிப்புடன் இருங்கள்


தனியாக வந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போதை சாமியார்

நெல்லை லாட்ஜில் தனியாக வந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போதை சாமியார் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன்கேரள மாநிலம் கோவளம் லாட்ஜ் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது லாட்ஜ்க்கு அடிக்கடி வந்துசென்ற சோட்டானிக்கரையை சேர்ந்த சாமியார் நந்தகுமார்(40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சாமியார் சோதிடம் பார்த்து சொன்னவை நடப்பதாக கிருஷ்ணன் நம்பினார்.

நேற்று சாமியார் நந்தகுமார் நெல்லையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். கிருஷ்ணன் நெல்லையில் உள்ள தமது மனைவி லலிதாவுக்கு போன் செய்துசாமியார் நெல்லை வந்துள்ள தகவலை தெரிவித்தார். லலிதாகளக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பானுமதி(38) க்கு ஜோதிடம் பார்க்க அழைத்துச்சென்றார். லாட்ஜ் அறையில் சாமியார் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் அறைக்குள் வந்த பெண்களிடம் வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். பின்,இருவரின் தலைமுடியை பிடித்து இழுத்து ஒருவர் தலையை இன்னொருவர் தலையோடு மோதியுள்ளார். சேலையை பிடித்து இழுத்துள்ளார். தலைகளை மோதச் செய்ததால் ஏற்பட்ட காயத்தால் இருவரும் அழுதபடியே வெளியேவந்தனர். தலைவிரி கோலமாக வந்த அவர்கள் ஜங்ஷன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து போதை சாமியார் நந்தகுமாரை கைது செய்தனர். நெல்லையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



தோஷம் நீங்கபரிகாரம் செய்வதாகக் கூறி,

75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 320 சவரன் நகைகளை அபகரித்த போலி ஜோதிடர் தாமோதரன்அவரது மனைவியான தி.மு.க.கவுன்சிலர் அமுதா உட்பட மூன்று பேரைபோலீசார் கைது செய்தனர். மதுரை பந்தடி பால்மால் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சந்துரு. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மனைவி தனுஜா, 36. இவர் தாய்உமாதேவி. இவர் மதுரை காதக்கிணற்றில் பகவதி மண்டபத்திற்கு வழிபடச் சென்றபோதுஅங்கு காவலுக்கு இருந்த சரோஜினிமகள் கங்கா அறிமுகம் ஆகினர். இவர்களிடம் தனது குடும்ப பிரச்னையை உமாதேவி கூறினார். "மதுரை அனுப்பானடி பகலவன் நகரை சேர்ந்த ஜோதிடர் தாமோதரன், 41, என்பவரிடம் கூறினால்பிரச்னை தீரும்என்றனர்.
கடந்த ஏப்.,11 ல் உமாதேவி வீட்டில்தாமோதரன் பூஜை செய்தார். இதை அறிந்த தனுஜாவும்தனது குடும்ப பிரச்னையைதாமோதரனிடம் கூறியுள்ளார். அவர்," உங்கள் வீட்டிற்கு வந்து குறி சொன்னால் தான் சரி செய்ய முடியும்எனக்கூறிஅங்கு ஏப்.,15 ல் குறிபார்த்துள்ளார். தனுஜாவின் குடும்ப பிரச்னையை முன்பே தெரிந்து வைத்திருந்த தாமோதரன்ஏப்.,16 ல்அதிகாலை மணிக்கு கள்ளழகர் வேடமிட்டுதன்னை கள்ளழகர் அனுப்பியதாகக் கூறிதனுஜா வீட்டிற்கு சென்று குறி சொல்லியுள்ளார். இதை நம்பிய தனுஜாதன் வீட்டில் பூஜை செய்யுமாறு அழைத்துள்ளார்.தாமோதரன் மற்றும் அவரது மனைவி, 54 வது வார்டு மாநகராட்சி தி.மு.க.கவுன்சிலர் அமுதா, 32, "உங்கள் கணவருக்கு கண்டம் உள்ளது. வீட்டில் உள்ள அனைத்து நகைகளையும்குண்டுமணி கூட மீதம் வைக்காமல் கொண்டு வந்து,மூன்று நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பூஜையில் பாம்பு வந்து தீண்டிஅதன் மூச்சுக் காற்று பட்டால் தோஷம் நீங்கும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பூஜை செய்வது உங்கள் கணவருக்குத் தெரிந்தால்,உங்கள் கண்ணெதிரிலேயே இறந்து விடுவார்என்றனர்.
சந்துருவுக்கு தெரியாமல்தனுஜா, 320 சவரன் நகைகளைதாமோதரனிடம் கொடுத்துள்ளார். அவர் நகைகளை ஒரு மண்பானையில் இட்டுபரிகாரம் செய்வது போல் நடித்துஎடுத்துச் சென்று விட்டார். தனுஜாமூன்று நாட்களுக்கு பின் கேட்டபோது, "தோஷம் நீங்கவில்லைபூஜை முடியவில்லைஎன,தாமோதரன் சமாளித்துள்ளார். பின்அவரை தனுஜா பலமுறை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோதுபேசுவதை தவிர்த்துள்ளார். தனுஜா மீண்டும், "நகையை கொடுங்கள்கணவருக்கு தெரிந்து விட்டதுஎன கேட்டுள்ளார். தாமோதரன்,"உன் கணவர் தோஷத்தால் இறக்கப் போவதில்லை. அடிக்கடி போனில் பேசினால் அல்லது போலீசில் புகார் செய்தால்உனது கணவரை கொலை செய்து விடுவோம்'எனமிரட்டியுள்ளார்.
சட்டம் - ஒழுங்கு துணைக் கமிஷனர் செந்தில்குமாரிடம் தனுஜா புகார் செய்தார். திலகர் திடல் உதவிக் கமிஷனர் ஏ. கணேசன் தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலைமதுரை ஜான்சி ராணி பூங்காவில்போர்டு காருடன் இருந்த தாமோதரனைபோலீசார் கைது செய்தனர். உருக்குவதற்காக வைத்திருந்த 88 சவரன் நகை, 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்கார்தனியார் வங்கிகளில் அடகு வைத்திருந்த, 88 சவரன் நகைகள் ஆகியவற்றைபறிமுதல் செய்தனர். உடந்தையாக இருந்த மனைவி அமுதாதாமோதரனின் சகோதரி விஜியைநேற்று காலை கைது செய்தனர். அவர்களிடம் 38சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதில் வைரம்ரத்தின கற்கள் பதித்த மாலைகள் அடங்கும். அவற்றின் மொத்த மதிப்பு 60 லட்சம் ரூபாய்.
மீண்டும் தே.மு.தி.க.,விற்கு தாவ முயற்சி
தாமோதரன் தே.மு.தி.க.சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் 2006ல் போட்டியிட்டுதோல்வியடைந்தவர். அந்த அனுதாபத்தில்மனைவி அமுதாமாநகராட்சி 54 வார்டில் போட்டியிடதே.மு.தி.க.சீட் வழங்கியது. வெற்றி பெற்ற அமுதாபின் தி.மு.க.,விற்கு தாவினார். ஆட்சி மாற்றத்தால்மீண்டும் தே.மு.தி.க.,வில் சேர இருவரும் முடிவு செய்தனர். சில தினங்களுக்கு முன்தாமோதரன் காரில்தெப்பக்குளம் பகுதியில்,தே.மு.தி.க.கொடியுடன் வந்தபோதுஅக்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்பிரச்னை ஏற்பட்டது. நகைகளுடன் மாயமான தாமோதரன்மனைவிநான்கு குழந்தைகளுடன் சென்னை திருவேற்காட்டில் வாடகை வீட்டில் தங்கினார். ஒரு லட்சம் முன்பணம்மாதம் 11 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துள்ளார். ஏமாற்றி பெற்ற நகைகளை அமுதாவிற்கு போட்டு அழகு பார்த்துள்ளார்.


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More