Tuesday, July 26, 2011

அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்!



 
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி  உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு"
 
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹ்).
 
அல்லாஹ்வின் இறுதித்தூதர் - அகிலத்தின் அருட்கொடை - அனைத்துலக  மக்களுக்கும் அழகான முன்மாதிரி - நம் இருலோக இரட்சகர் -ஈமான் கொண்ட இஸ்லாமியர் அனைவருக்கும் உயிருக்கும் மேலான - முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பாடிப்பாடிப் பரவசம் கொண்டவர்கள் கோடிப்பேர். 
 
உலக மொழிகள் அனைத்திலும் அவர்களைப் பற்றிய கவிதைகளும் காவியங்களும் ஏராளம் ஏராளம்.  அவ்வகையில் உலக மொழிகளில் எழுதப்பெற்ற  உயர்ந்த கவிதைகளின் ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புக்கள்வரவேற்கப்படுகின்றன.
 
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி மிகச்சிறந்த கவிதைகள் என்று கருதத்தக்கவைகளைத் தொகுத்து அழகிய நூலாக உருவாக்கும் முயற்சி இறையருளால் நடைபெற்று வருகிறது.
 
ஆர்வம் உடையவர்கள் தாங்கள் படித்த - படித்ததில் பிடித்த - தங்கள் வசம் இருக்கின்ற அத்தகு கவிதைகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் நலம்.
தேர்வுக்குழுவினர் தேர்ந்துஎடுக்கும் மிகச்சிறந்த கவிதைகள் நூலில் இடம்பெறும்.  மொழி - சமய பாகுபாடுகள் இல்லை.  எம்மொழி கவிதைகளாயினும் சரியே!
அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் மீது  பற்றுள்ள அனைவருக்கும் இம்மடலை நீங்கள் அனுப்பலாம்.

வஸ்ஸலாம்.
 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More