Tuesday, July 26, 2011

அஸ்ஸலாமு அலைக்கும்,,,





image.png




பெற்றவர்கள் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால் தான்குழந்தைகளும்
நன்றாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையும் மாறியுள்ளது.

குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கஅவரவர் வீடுகளில் சிறு நூலகங்கள் இருந்தாலே போதும் என அமெரிக்காநெவேடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும்தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக விளங்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காககுழந்தைகளுக்கு வகுப்பு பாடங்களுடன் தனித்திறனாய்வு பயிற்சிகளாகயோகாதியானம்,கராத்தே விளையாட்டு போன்ற சிறப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர். 
மேலும்குழந்தைகளின் உடலுக்கும்மனதிற்கும் சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வலியுறுத்துவது வழக்கம். குழந்தைகள் கல்வியில் ஆர்வம் செலுத்துவது குறித்துஅமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழகம் 20 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆய்வில்வீட்டில் 500புத்தகங்கள் கொண்ட சிறு நூலகம் இருக்கும் பட்சத்தில்குழந்தைகளின் ஆர்வம் புத்தகங்கள் பக்கம் திரும்புவது தெளிவானது.
மேலும்இந்த ஆய்வில் மூன்று ஆண்டுகள் மட்டுமே படித்த பெற்றோர் மற்றும் 16 ஆண்டுகள் படித்த பெற்றோர் வீடுகளில்சிறு நூலகம் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது,குழந்தைகளின் படிப்பில் பெரும் மாறுதல்கள் காணப்பட்டது. சிறு நூலகங்கள் இருக்கும் வீட்டில் மூன்று வயதிலேயே குழந்தைகள் புத்தகங்கள் பக்கம் திரும்புவது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு நூலகம் உள்ள வீடுகளில் வளரும் குழந்தைகளின் கல்வித் தரமும் சராசரி உயர்ந்தது.
இந்த ஆய்வின் மூலம்பெற்றவர்கள் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால் தான்குழந்தைகளும் நன்றாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையும் மாறியுள்ளது.

தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது,
தொலைக்காட்ச்சி அதிகமாக பார்த்த்துதான் காரணம்

கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்துவது, தொலைக்காட்ச்சி அதிகமாக பார்ப்பதனால் அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது'எனஅமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மொபைல்போனுக்கும்குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது: மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும்,அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில்கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால்அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்குபெற்ற சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்உடல் பருமன்,எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.
இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில்தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது,  , தொலைக்காட்ச்சி அதிகமாக பார்த்த்துதான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும்இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு லீகாகூறினார்.

வாகனம்கான்கிரீட் வீடுகுளிர்சாதனப் பெட்டிவீட்டுத் தொலைபேசி ஆகியவற்றின் உரிமையாளர்கள்

நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது.
இத்திட்டம் திரிபுரா மாநிலத்தில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
சமூக நலத்திட்டங்களுக்கு தகுதியுடைய ஏழைகளை கண்டறிய இந்த கணக்கெடுப்பு அரசுக்கு உதவியாக இருக்கும். இதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வாகனம்கான்கிரீட் வீடுகுளிர்சாதனப் பெட்டிவீட்டுத் தொலைபேசி ஆகியவற்றின் உரிமையாளர்களும்அரசு ஊழியர்கள் மற்றும் ரூ. 10 ஆயிரத்திற்கும் மேல் மாத வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.
ஊரக வளர்ச்சித்துறைவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டப் பிரிவுமத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளன.
இந்த கணக்கெடுப்பு கணினி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் அதில் உடனடியாக பதிவு செய்யப்படும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More