மாரடைப்பால் மரணம் என்று சொல்லிக் கேள்விப் பட்டுள்ளோம். ஆனால் இந்த மாரடைப்பு என்றால் என்ன என்று தெரியுமா?
இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (தமனி) அடைபடுவதால், இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபட்டு, அந்த பகுதி செயலிழந்து போகிறது. இதைத்தான் மாரடைப்பு என்று கூறுகிறார்கள்.
ரத்த ஓட்டத் தடை என்பது பெரும்பாலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தால் வருகிறது. உடலில் அதிகமான கொழுப்பு சேரும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட மேலும் பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மன உளைச்சல், உடல் பருமன், அதிக உடல் உழைப்பின்றி இருப்பது போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணங்களாகின்றன.
மாரடைப்பு ஏற்பட மேற்கூறிய காரணங்கள் இருந்தாலும், பரம்பரை பரம்பரையாகவும் இந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே, நமது முன்னோர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.





0 comments:
Post a Comment