Tuesday, July 26, 2011

44.சர்க்கரை நோயு‌ம் ஆ‌ண்மை‌‌க் குறைவு‌ம்

சர்க்கரை நோய்க்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு? இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு. நாட்பட்ட சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதனுடைய தாக்கம் தெரியும்.
இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளாவிட்டால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த நாளங்கள் சிறியவையாக இருப்பதால் அடைபட்டும், சுருங்கியும், சிதைந்தும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத்தன்மை குறைகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் போகிறது.
இன்னொரு முக்கிய விஷயம், சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத் தன்மை வராத நிலை ஏற்பட்டால் சர்க்கரை அதிகரித்துவிட்டது என்று பொருள். அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 60 விழுக்காட்டினருக்கு பின்னாளில் மாரடைப்பு வந்துள்ளது. 40 விழுக்காட்டினர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டுள்ளனர்.
எனவே, ஆண்மைக் குறைவு என்ற பிரச்சனை வந்தாலே இதய நோய்க்கான பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதை அறியாமல் ஆண்மைக் குறைவுக்காக மட்டுமே சிகிச்சை செய்து கொண்டு திடீர் மாரடைப்பினால் உயிரைவிடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.
சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டாலே பெரும்பாலான பாலியல் பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம் என்ற விவரம் தெரியாமல் பலர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். இதனை த‌வி‌ர்‌க்கலா‌ம்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More