Wednesday, July 27, 2011

வாழை நார் தொழில்நுட்பம்: 12-ல் இலவச பயிற்சி



வாழை நார் தொழில்நுட்பம்: 12-ல் இலவச பயிற்சி

வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் குறித்துநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூலை 12-ம் தேதி  இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சியில் வாழை நாருக்கான மட்டையைத் தேர்வு செய்யும் முறைஇயந்திரம் மூலம் வாழை நார் பிரித்தெடுத்தல்அதன் நன்மைகள்நாரைப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிலிருந்து தயார் செய்யப்படும் பொருள்கள் குறித்த விரிவான பயிற்சி அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள்பண்ணையாளர்கள்ஊரக மகளிர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு, 04286-266345, 266244, 266650 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழைப்பும்தொழில் நேர்மையும் இருந்தால் எத்தகைய சவால்களையும் சமாளிக்கலாம் !
சவாலே சமாளி: சகலகலாவல்லி சந்திரா!

 ஆயத்த ஆடை தயாரிப்பாளர்தையல் பயிற்சியாளர்அழகுக் கலை நிபுணர் என பன்முக தொழில் முனைவோராக காலில் சக்கரம் கட்டாத குறையாக சுற்றிச் சுழல்கிறார்ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த சந்திரா.
12 ஆண்டுகள் ஓயாத உழைப்பால் இந்தச் சாதனையை இவர் எட்டிப்பிடித்துள்ளார். கரூர் மாவட்டம்,பரமத்தி வேலூரைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும்சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சந்திராவுக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கூட்டுக் குடும்பமாய் கணவர் வீட்டில் வசித்து வந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண் வாரிசு இல்லை என்பதால் வரதட்சிணைக் கொடுமையால் வதைக்கப்பட்டார் சந்திரா.
இதனால், 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவர்குழந்தைகளுடன் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்துக்கு தனிக்குடித்தனம் வந்தார். மாற்றுத்திறனாளியான இவரது கணவர்டிராக்டர் ஓட்டி கிடைத்த குறைந்த வருமானம் குடும்பச் செலவுக்கே போதுமானதாக இல்லை. இதனால்,தனக்குத் தெரிந்த தையல் தொழில் மூலம்வீட்டிலேயே பெண்களுக்கான துணிகளை தைத்துக் கொடுத்தார்.
படிப்படியாக இந்தத் தொழிலில் கிடைத்த வருமானத்தைக் கொண்டுஅந்தியூர் பஸ் நிலையம் எதிரில்தனது மூத்த மகள் ஆர்த்தி பெயரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் தையல் கடையைத் தொடங்கினார் சந்திரா. ஒரே தையல் இயந்திரத்தைக் கொண்டு துணிகளை தைத்துக் கொடுப்பதோடு,தையல் பயிற்சியும் அளித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறு நகரங்களில் கூட அழகுக் கலை நிலையங்கள் தலைதூக்கின. இந்த நேரத்தில் அழகுக் கலை படிப்பையும் தொலைநிலைக் கல்வியில் படித்து முடித்தார்.
தனது கடையின் ஒரு பகுதியிலேயே பெண்களுக்கான அழகுக் கலை நிலையத்தை தொடங்கினார். இப்போது தினமும் 10 பெண்களாவது முக அலங்காரத்திற்காக வருகின்றனர். தையல் கடையை படிப்படியாக விரிவுபடுத்தியதில் இங்கு 20 பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 250பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்து வருகிறார்.
கணவரை இழந்தோர்கணவரால் கைவிடப்பட்டோர்ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கிறார். இதுவரை ஆயிரம் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்துள்ளார்.
தனது வாழ்க்கைப் பயணம் குறித்து சந்திரா கூறியது:
தொடர் முயற்சியும்உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரமுடியும்.  துணிகளைக் கேட்டுவீடுவீடாக ஏறி இறங்கிய காலம் மாறிஇப்போது 20 பேர் இருந்தும் கடைக்கு வரும் துணிகளை தைத்துக் கொடுக்க நேரமில்லை.  இதேபோல்தான் அழகுக் கலை நிலையத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது இங்கு வருபவர்களுக்கு முக அலங்காரம் செய்ய முடியாமல் அடுத்தநாள் வருமாறு கூறிவருகிறேன். காலை மணிக்கு திறக்கும் கடையை இரவு மணிக்கு பிறகு கூட மூட முடிவதில்லை.

12 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூருக்கு வந்தபோதுஉணவுக்குகூட கஷ்டப்பட்டேன். இப்போது சொந்தமாக இடம் வாங்கியுள்ளேன்அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டி கூடுதலாக தையல் இயந்திரங்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்துவேன்.

12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 10 ரூபாய் கடன் கொடுப்பதற்கே இங்குள்ளவர்கள் தயங்கினர். ஆனால் இப்போது 10 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பதற்கு வங்கி தயாராக இருக்கிறது.
உழைப்பும்தொழில் நேர்மையும் இருந்தால் எத்தகைய சவால்களையும் பெண்கள் சமாளித்து விடலாம். இந்த தன்னம்பிக்கை கொடுத்த முன்னேற்றத்தின் மூலம்தான் மூத்த மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துஅவருக்கு சிறப்பான திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளேன். மேலும் நான் நினைத்துக்கூட பார்க்காத தனியார் பள்ளியில் இளைய மகள் அபினாவுக்கு கல்வி வாய்ப்பையும் கொடுத்துள்ளேன்.
தையல் தொழிலில் 50 இயந்திரங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி பெறுவதே லட்சியம் என்றாலும்அதேவேளையில் என்னைப் போல வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் யாராக இருந்தாலும்தன்னைத் தேடிவந்தால்அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்கிறார்  

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More