ஜூலை முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும்'
மாணவியருக்கு வழங்கப்படும், இலவச மாதாந்திர ரயில் சீசன் டிக்கெட்டுகள், அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இன்ஜினியரிங், மருத்துவம் உட்பட தொழிற்படிப்பு படிக்கும் மாணவியருக்கும் நீட்டிக்கப்படும் என, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளிகள், மற்றும் அரசு கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவியருக்கு, தங்கள் வீடு அமைந்துள்ள இடத்தில் இருந்து,பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வர, மாதாந்திர சீசன் ரயில் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது உள்ளூர் பயணத்திற்கு மட்டும் பொருந்தும்.
இந்த சலுகையை இன்ஜினியரிங், மருத்துவம் உட்பட தொழிற்படிப்பு படிக்கும் மாணவியருக்கும் நீடிக்கப்படும் என, முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, ரயில்வே பட்ஜெட் விவாதத்தின் போது அறிவித்து இருந்தார். இது எப்போதும் செயல்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மாணவியருக்கு வழங்கப்படும் இலவச மாதாந்திர சீசன் ரயில் டிக்கெட்டுகள், எம்.பி.பி.எஸ்.,
|
விதியை மீறுகிறார்களா புகார் செய்யுங்கள்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஐகோர்ட் உத்தரவில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும். மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என, போக்குவரத்துத் துறை, மாவட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு இருக்க வேண்டும். முன்னும், பின்னும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் என எழுதப்பட்டு இருக்க வேண்டும். முதலுதவி பெட்டியில் மருந்துகள் கண்டிப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் கதவுகள் சரியாக பூட்டப்படும் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய, ஒரு உதவியாளர் இருக்க வேண்டும்.
டிரைவர், பத்து ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். வாகனங்களில் குறிப்பிட்டுள்ள இருக்கைக்கு மேல் மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. அதே போன்று, ஆட்டோக்களில், பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் மட்டுமே ஏற்றிச் செல்லும் போது, மிகவும் பாதுகாப்பாகவும், அவர்கள் உடமைகளை வாகனத்துக்கு வெளியே தொங்க விட்டு, பாதுகாப்பற்ற முறையில், ஆட்டோக்கள் இயக்கப்படக் கூடாது. இதே போன்று பெற்றோர், பள்ளி நிர்வாகங்களும், மாணவர்கள் செல்லும் ஆட்டோக்களில், ஐந்து பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரி வாகனங்களில், பாதுகாப்பு, "கிரில்" பொருத்த வேண்டும். ஆசிரியர் நிலையில் ஒருவரை, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பணியில் அமர்த்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களில், டிரைவர்,உதவியாளர் பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவேட்டை, பள்ளி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் உதவியாளர், மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இத்தகையை நடைமுறைகளை அமல்படுத்தாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஐகோர்ட் உத்தரவில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும். மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
|
|
கிறித்தவர்களின்-விமர்சனங்களுக்
மார்க்க சம்மந்தமான சந்தேகங்களை நேரில் கேட்டு தெளிவு பெறுவதற்காக
9865584000 - 9003225959 – 9840743337 ஆகிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தினமும் மாலை 4 முதல் இரவு 10 வரை கேள்விகள் கேட்டு நம் மார்க்க அறிவை வளர்த்து இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாம் அமைத்துக் கொள்ளலாம். இன்ஷாஅல்லாஹ்.
பெண்கள் மட்டும் பெண் ஆலிமாவிடம் கேள்வி கேட்க.
9940652566 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
|





0 comments:
Post a Comment