Sunday, June 26, 2011

இஸ்லாமிய இளைஞர்களே !



To Watch P Jainulabdeen's Complete Speeches in one Clip 
Click here
------------------------------------------
ஒருவரால் இன்னொருவரைத் திருத்த முடியாது.

யாருமே தானாக மாறினால்தான் உண்டு. 

வீட்டில் பையன் சரியாகப் படிக்கவில்லை என்றால் "படி படிஎன்று சொல்வார்கள். அடுத்து வரும் தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்தால் "படிஎன்று சொல்ல மாட்டார்கள்சிறிய பையன் என்று கூடப் பார்க்காமல் அடி பின்னிவிடுவார்கள். அப்படியாவது அந்தப் பையன் படிப்பானாபடிக்காமல் இருப்பதற்காகவே பிறந்தவன் மாதிரி படிப்பைத் தவிர பிறவற்றில் அவன் சுறுசுறுப்பாக இருப்பான். அவனால் பெற்றோருக்கு டென்ஷன்அவனுக்கும் டென்ஷன். ""படிக்காத பிள்ளையை அடித்துப் பயனில்லை '' என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். " பையன் ஏன் படிக்கவில்லை... அவனுக்கென்ன பிரச்னைஎன்ன குறைஎன்று பார்க்க வேண்டும்'' என்றும் சொல்கிறார்கள். கல்லூரிபள்ளி மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறவர்கள் அப்படி தன்னை நாடி வருபவர்களுக்கு ஆலோசனை--வழங்குகிறார்கள்.
டென்ஷன் நிறைந்த இந்த உலகில் மனஇறுக்கம் இல்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்வதுஅதற்கு என்ன செய்ய வேண்டும் குடிசையில் வாழும் குழந்தைகளின் மனநலத்திற்கு அவர்களுடைய குடும்பச் சூழ்நிலையே மிகப் பெரிய கேடாக அமைந்திருக்கின்றது..
பெரும்பாலும் குடிசையில் வாழும் குழந்தைகளுக்கு அப்பாஅம்மா இருவரும் உள்ள குடும்பம் இருக்காது. அம்மாஅப்பா இருவரில் யாராவது ஒருவர் மட்டுமே இருப்பார்கள். அம்மாவை விட்டுவிட்டு அப்பா வேறு கல்யாணம் செய்து கொண்டிருப்பார். புதிய அம்மாவின் கொடுமைகளை நிறைய குழந்தைகள் அனுபவித்து வருவார்கள். கடைசியில் மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள்.
பொதுவாக மாணவர்களிடம் காணப்படும் மனநலப் பிரச்னைகளில் தாழ்வு மனப்பான்மை முக்கியமான ஒன்று. இவர்கள் பிறருடன் எப்போதும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தான் இருப்பதைப் பிறருக்குக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். பிறர் தன்னைவிட சிறப்பாக ஏதாவது செய்து பெயர் வாங்கிவிடுவார்களோ என்று பயந்து கொண்டே இருப்பார்கள். பிறர் முன்னேறுவதை இவர்களால் தாங்க முடியாது. இப்படிப்பட்டவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது ?.  "முதலில் உங்கள் திறன் என்னஎன்பதைச் சரியாக மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய சூழ்நிலையில் இதைவிடச் சிறப்பாக இருக்க முடியுமாஎன்று யோசியுங்கள். பிறருடன் உங்களை ஒப்பிட்டு உங்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள். தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்க இதுதான் சிறந்த வழி'

"
எனக்குச் சுட்டுப் போட்டாலும் படிப்பு வரவில்லைஎன்று சில மாணவர்கள் நினைப்பார்கள். பல பள்ளிகளில்கல்லூரிகளில் இத்தகைய மாணவர்கள் இருப்பார்கள். சில மாணவர்களுக்குக் கணக்கே வராது. அப்படிப்பட்டவர்களைப் பெற்றோர் வற்புறுத்தி என்ஜினியரிங் படிப்பில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் எந்த ஆர்வமுமில்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் ஆலோசனை கேட்டால் அவர்களிடம் தனியாகப் பேசுங்கள். "முதலில் சூழ்நிலையை ஒத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எதிர்காலத்திற்காகப் படிக்க வேண்டும். வகுப்பில் நடக்கும் தேர்வுகளில் ஒழுங்காகப் படித்துப் பாஸ் செய்ய வேண்டும். தெரியாத கணக்குகளை அடிக்கடி போட்டுப் பார்க்க வேண்டும்'என்றெல்லாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள்.  சில திறன்குறைந்த மாணவர்களை எல்லாருடைய முன்னிலையிலும் ஆசிரியர்கள் மட்டம் தட்டிப் பேசுவார்கள். இதனால் திறன்குறைந்த மாணவர்கள் மேலும் திறன்    குறைந்தவராக ஆவதோடுமனநலப் பிரச்னை களுக்கும் உள்ளாவார்.
மாணவரிடம் எப்படி நடந்து  கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வேண்டும். எந்தக் குழந்தையையும் அடிப்பதாலோதிட்டுவதாலோ ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் அதனால் எல்லாம் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அவர்களிடம் அன்பாகஆதரவாகப் பேசினால் மட்டுமே நிச்சயமாக மாறுவார்கள். இன்ஷாஅல்லாஹ். அதுபோல நான்கு பேர் உள்ள இடத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. அது அவர்களின் மனநிலையைப் பாதிக்கும். தனியாக இருக்கும்போது அன்பாகப் பேசினால்தான் எதையும் மாற்ற முடியும். அதுமட்டுமல்லஒருவரால் இன்னொருவரைத் திருத்த முடியாது. யாருமே தானாக மாறினால்தான் உண்டு. அவர்கள் தானாக மாறும் அளவுக்கு அவர்களிடம் இணக்கமாகப் பேச வேண்டும். இவையெல்லாம் பெற்றோரும் ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் எடுத்ததற்கெல்லாம் டென்ஷன் ஆவார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எதிர்பார்த்தபடி வெளியுலகம் இல்லாமல் இருப்பதுதான். வெளியுலகத்தில் எப்போதும் பல காரணங்களால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரச்னைகளைக் கண்டதும் உடனே எதிர்வினை புரிவது சிலருடைய இயல்பு.  இதனால் மனஇறுக்கம் அடைகிறார்கள். அவர் இப்படியிருக்கிறாரேஅது இப்படியிருக்கிறதேஅவர் இப்படிப் பேசிவிட்டாரேஇப்படி நடந்துவிட்டதே?என்று பிரச்னைகளைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டேருப்பார்கள். அப்படி யோசிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர மாட்டார்கள். யாராக இருந்தாலும் வெளியுலகத்தைசமுதாயத்தை உடனே மாற்ற முடியாது. எனவே வெளியில் இருப்பதை அது அவ்வாறுதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் மனநிலை முதலில் வர வேண்டும். அப்படி ஒத்துக் கொண்டால் அந்தப் பிரச்ûனைக்கு என்ன தீர்வு என்று யோசிக்க முடியும்.
ஒருவர் தனது மிகுந்த அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டார் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக எவ்வளவு காலம் வருந்திக் கொண்டிருக்க முடியும்அதிலிருந்து மீண்டுஅடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தால் மன இறுக்கத்தில் இருந்து தப்பிப்பதோடுபிரச்னைகளையும் தீர்க்க முடியும். பிரச்னைகளுக்கு உடனே எதிர்வினை செய்யாமல் அவற்றை நிதானமாக அணுகும் மனநிலையை-வளர்த்துக்-கொள்ள-வேண்டும்.
அதற்கு ஜமாத் தொழுகை, நல்ல புத்தகங்கள் படித்தல், மூச்சுப் பயிற்சி போன்றவை உதவலாம். இன்ஷாஅல்லாஹ்.

 ----------------------------------------------------------------------------------
 அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: புகாரி 4826


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More