Sunday, June 26, 2011

பொறாமையை நீக்கும் "ஸகாத்"....



"தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது, அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்" என்ற உணர்வே பொறாமையாகும்....

"ஸகாத்" கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால், அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் விடுபட்டு விடுகின்றது...

ஏழைகள் கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் "ஸகாத்" மூலம் தமக்கு உதவும் போது, தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை...

எனவே, ஸகாத் கொடுப்பவர், வாங்குபவர் இருவரிடமும் "பொறாமை" என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது..


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More