Sunday, June 26, 2011

இதைச் செய்யத் தேவை ஒரு நல்ல மக்கள் நல அரசுதான்




விழித்துக் கொள்வோம்'.பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று பலரும்பல அமைப்புகளும்ஏடுகளும்ஊடகங்களும் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனாலும் ஒழிக்க முடியவில்லை. பிளாஸ்டிக் குப்பைகளால் பூமியே மலடாகும் அபாயம் உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும்பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க முடியவில்லை.
 ஒரு பொருளை ஒழிக்க அதை வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்து எறிய வேண்டும். வேரைவிட்டு கிளைகளை மட்டும் வெட்டுவதால் ஒழியாது. மேலும் மேலும் தளதளவென்றுதான் வளரும்.
 பிளாஸ்டிக் பைகளைபாட்டில்களை மக்களே விரும்பிப் பயன்படுத்துவதாகக் கருதி அவர்களை மட்டுமே குற்றவாளி என்று அனைவரும் கூறி வருவது சரியல்ல. சாதாரண மக்கள் அவர்களது வீட்டிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்து எடுத்து வருவதில்லை. கடைகளில் கொடுப்பதையோ விற்பதையோதான் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதைத் தவறு என்று கூறுவோர் அதை உற்பத்தி செய்து விற்று லாபம் பார்க்கும் முதலாளிகளை உற்பத்தி செய்யாமல் தடுக்கத் தயங்குவது ஏன்?
 பிளாஸ்டிக் பொருள்கள் புழக்கத்துக்கு வருவதற்குமுன் மக்கள் பைகளைப் பயன்படுத்தவில்லையா,என்னதுணிப்பைகாகிதப்பைபாட்டில்கள் இவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள். இவற்றை மக்கள் கையிலிருந்து எடுத்துவிட்டு பிளாஸ்டிக் பொருள்களைத் திணித்தது யார்உற்பத்தியாளர்களும் லாபம் ஈட்டுபவர்களும்தானே. உற்பத்தியை இந்த அரசு தடுத்தால் அல்லது ஒழுங்குபடுத்தினால் அனைத்தும் சரியாகிவிடும். அதைச் செய்யாமல் மக்களைக் குறைகூறுவது எந்தவகையில் சரி?
 புகையிலை உற்பத்தியைத் தடை செய்யாமல் "புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடுஎன பிரசாரம் செய்வது சாராய ஆலைகளை மேலும் மேலும் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்'என்பது. கல்வியைக் கடைச்சரக்காக்கிவிட்டு "பெற்றோரைக் குறை சொல்வது - போன்ற முரண்பாடான கொள்கைளைக் கைவிட்டு விஞ்ஞான வளர்ச்சியால் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதுடன் அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் அதே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி சீர்செய்வதும் அரசியல் தலைமையின் கடமை. அந்த வகையில் பிளாஸ்டிக் பொருள்கள் என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் உன்னத விஷயம்தான். பிளாஸ்டிக் கழிவானபின் மறுசுழற்சி முறையில் பயன்பெறத்தக்க வகையில் மாற்றி அமைப்பது அரசின் கடமை. அதற்கான தொழில்நுட்பமும் வெளிநாடுகளில் உள்ளது. அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் குப்பைகளையும்ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகளையும்ஆயுதக் கழிவுகளையும் இறக்குமதி செய்யும் அரசு இந்தத் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்தால்பிளாஸ்டிக் பொருள்களால் தீமைகள்தான் என்று புலம்புவதைத் தவிர்த்து அதையும் ஆக்கமுறையில் பயன்படுத்தினால் நாட்டுக்கும்வீட்டுக்கும் நன்மையே. இதைச் செய்யத் தேவை ஒரு நல்ல மக்கள் நல அரசுதான். அந்த அரசு அமைப்பு எது என்பதுதான் கேள்விக்குறி.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More