Sunday, June 26, 2011

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, 'என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அபூ பக்ர் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் பின் வரும் கவிதையைக் கூறுவார்கள்:
காலை
வாழ்த்துக் கூறப்பெற்ற
நிலையில்
ஒவ்வொரு மனிதனும்
தம் குடும்பத்தாரோடு
காலைப் பொழுதை அடைகிறான்....
(ஆனால்,)
மரணம் - அவன் செருப்பு வாரை விட
மிக அருகில் இருக்கிறது
(என்பது -
அவனுக்குத் தெரிவதில்லை)
பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக்குரல் எழுப்பி,
'இத்கிர்' (நறுமணப்) புல்லும்
'ஜலீல்' (கூரைப்) புல்லும்
என்னைச் சூழ்ந்திருக்க..
(மக்காவின்) பள்ளத்தாக்கில்
ஓர் இராப் பொழுதையேனும்
நான் கழிப்பேனா?...
'மஜின்னா' எனும்
(மக்காவின் இனிப்புச்சுனை) நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா...?
(மக்கா நகரின்)
ஷாமா, தஃபீல் மலைகள்
(இனி எப்போதாவது)
எனக்குத் தென்படுமா?...
என்ற கவிதையைக் கூறுவார்கள்.
உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்களின் நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதை விட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்கு! எங்களுடைய (அளவைகளான) 'ஸாவு', 'முத்து' முதலியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளத்தை வழங்கு! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை 'ஜுஹ்ஃபா' என்னுமிடத்தில் (குடி) அமர்த்திவிடு" என்று பிரார்த்திதார்கள்.(புஹாரி-3926.)

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More