Wednesday, April 25, 2012

நரகம் செல்ல ஆட்கள் எடுக்கும் இடம்

அல்லாஹ் கூறுகிறான் ......இறைவனுக்கு இணைவைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டன் அதை தவிர மற்றவற்றை மன்னிப்பான் . இறைவன் அழைக்கிறான்.... பாவம் செய்துவிட்ட என்னுடைய அடியார்களே அல்லாஹுடைய அருளில் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் காபிர்கள் தான் அல்லாஹுடைய அருளில் நம்பிக்கை இழப்பார்கள், அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிக்க கூடியவனாக இருக்கிறன். இப்படிப்பட்ட எஜமான் இருக்க வேறொருவர் தேவை இல்லையே.. சிந்தியுங்கள்...!

zeyarath என்ற பெயரில் இஸ்லாத்துக்கு சம்பந்தம் இல்லாமல் செய்வது தான் ? கபுருக்கு சந்தனம் புசுவது , கந்துரி என்ற பெயரில் விழா கொண்டாடுவது இஸ்லாமிய மார்க்கமா ? இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது ?



உங்களுடைய தவறான நன்பிகையை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை ? இஸ்லாத்தின் பெயரால் செய்ய கூடிய தவறான காரியத்தை எடுத்து சொல்லுவது ஒவ் ஒரு முஸ்லிம் மீதும் கடமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் (மார்க்க விஷயத்தில்) பிற சமூகத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர்கள் அவர்களை சார்ந்தவர் நூல் : அபூ தாவூத் ௩௫௧௨
2:28 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.


1 comments:

அன்பார்ந்த சகோதர்களே , இந்த கந்தூரியின் விளைவை நீங்கள் இங்கு உணர்வது குறைவு தான் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா மறுமையில் நீங்கள் உணர்வீர்கள் , இந்த கந்தூரியை நடத்துவது அதற்கு உதவி செய்வது யாராயினும் கண்டிப்பாக அவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது , கண்டிப்பாக அவர்கள் பெயர்தாங்கி முஸ்லிமே தவிர , அவர்கள் நபிகள் கொண்டு வந்து கொடுத்த இஸ்லாத்தை தாங்குபவர் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை பற்றி உங்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து வைக்கும் மற்றவையும் கமெண்ட் கொடுத்து இழிவு படுத்த நம் சகோதரர்கள் தயாராக இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் செய்வது கமெண்ட் இல்லை , அடுத்தவர்களின் பாவங்களை அழித்து அதை உங்கள் பக்கம் பெறுகிறீர்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, உண்மையான விஷயம் என்றாவது ஒரு நாள் வெற்றி பெரும் பொய்யான விஷயம் மொத்தமாக அழிந்து விடும் இன்ஷா அல்லாஹ்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More