ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் IAS / IPS / TNPSC தேர்வு
சென்னை மேற்கு தாம்பரத்தில் இயங்கிவரும் இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் IAS / IPS / TNPSC தேர்வு பயிற்சியில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்து தேர்ச்சி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமி சிறப்பான பயிற்சியை அளித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் Study Materials அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் Test Series உள்ளது. தேர்வு முடிந்த பிறகு ஒவ்வொரு கேள்வித்தாளும் மாணவர்களோடு விவாதிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வில் செய்த தவறுகள் திருத்தப்படுகிறது.General Studies, Aptitude, Logical reasoning, English Language, Interpersonal Skills, Public Administration, Geography, Political Science, Sociology, Tamil Literature, History மற்றும் பல பாடங்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வகுப்பிலும் செய்தித்தாள்களில் வரும் முக்கிய நிகழ்வுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு மாணவர்களின் Current Affairs update செய்யப்படுகிறது.
Library facility, result oriented training, experienced faculty, study materials ஆகியவை இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் 2012ம் ஆண்டுக்கான ஒரு வருட பயிற்சி சேர்க்கை தற்போது தாம்பரத்தில் அமைந்திருக்கின்ற நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 9176966281 / 044-32427161, 044-43159963.
ஆசைகள்தான் கனவுகளை உண்டாக்குகின்றன! கனவுகள் தேவைகளாய் மாறுகின்றன!
இந்த ஆண்டு 26 நபர்கள் இந்திய சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர். ஒருமுறைக் கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும். அவர்கள் இந்திய சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை பயிற்சி அளிக்கப்படும். இது எங்கள் பயிற்சி மையத்தின் கூடுதல் சிறப்பாகும். ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு வருபவர்களுக்குத் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 இலவசம்.
தேவைகள் இலட்சியங்களாகி விடுகின்றன! இலட்சியங்கள் செயல்களை புரிய வைக்கின்றன! செயல்கள் இயக்கங்களாய் உருவாகின்றன! இயக்கங்கள் அனுபவங்களை விதைக்கின்றன. அனுபவங்கள் விளைவுகளாய் மலர்கின்றன - என்பதற்கு ஏற்ப தன் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்தி பயிற்சி கொடுத்து வருகிறார் நிறுவனத்தின் இயக்குனர் சுஜாதா ரமேஷ்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குள் நுழைய முதலில் யூ.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல வேண்டும். இது ஒரு பொதுத் தகுதித் தேர்வு (நுழைவுத் தேர்வு) இதில் வெல்வதற்கு முதலில் இந்தத் தேர்வு எப்படி நடத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கத் தகுதிகள்: இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஏதாவதொன்றில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பு (பட்டப்படிப்பில் இறுதியாண்டு தேர்வெழுதிய மாணவர்களும்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்த பட்ச நுழைவு வயதாக21 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக, பொதுப்பிரிவினருக்கு முப்பது வயது வரையிலும், பிற்பட்ட வகுப்பினர் 33 வயது வரையிலும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்35 வயது வரையிலும் இந்தத் தேர்வினை எழுதலாம். இந்தியக் குடியுரிமை உடையவராயிருத்தல் வேண்டும். (இன்னும் சில அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்).
மூன்று கட்ட தேர்வுகள்: முதற்கட்டத் தேர்வுகள் மே, ஜூன் மாதங்களிலும், முக்கியத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நடக்கும். இறுதியாக நேர்காணல் நடைபெறும்.
முதற்கட்டத் தேர்வு இரண்டு பேப்பர்களைக் கொண்டது. பொது அறிவு (200 மதிப்பெண்கள்) CSAT (200மதிப்பெண்கள்). இது நுழைவுத் தேர்வு போன்றது. இது பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் தகுதித் தேர்வு மட்டுமே. இதன் மதிப்பெண்கள் அடுத்த கட்ட முக்கியத் தேர்வு மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளப்படாது. இந்தத் தேர்வு சென்னை,மதுரை,புதுச்சேரி உட்பட, நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவினர் நான்கு முறையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 7 முறையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயது வரை எத்தனை முறை வேண்டுமானலும் இந்தத் தேர்வினை எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முக்கியத் தேர்வு எழுதலாம். இது ஒரு கடினமான கட்டம். ஓராண்டு காலம் நீடிக்கும் தேர்வு. எனவே, முதலில் தேர்வு முறையைப் புரிந்துகொள்வது நலம்.
பொது அறிவு: பொது அறிவுத் தேர்வில் கீழ்காணும் விஷயங்கள் குறித்த கேள்விகள் இடம்பெறும். இந்திய அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரம், இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு, இந்தியா மற்றும் உலகப் புவியியல், உள்நாட்டு வெளிநாட்டு, தற்போதைய நிகழ்வுகள்,தினசரி பொது அறிவியல், புத்தி சாதுர்யம் மற்றும் புள்ளிவிவரம் போன்றவை இடம்பெறும்.
மேலும் திட்டம், பட்ஜெட், நலத்திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள், ஆட்சிப் பொறுப்பு, கிராம நிர்வாக அமைப்பு, தேர்தல்முறை, இயற்கை வளம், பண்பாடு, வளர்ச்சி விகிதம், கழகங்கள், கமிஷன்கள் முதலியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு முறை: கடந்த 2010-ஆம் ஆண்டுவரை விருப்பப்பாடப் பிரிவு முறை இருந்தது. இதில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல்,இஞ்சினியரிங், வணிகவியல், பொருளியல், புவியியல், வரலாறு, சட்டம், கணிதம், மருத்துவம்,தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், மனோதத்துவம், பொது மேலாண்மை, சமூகவியல்,புள்ளியியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளில் நாம் தேர்ந்தெடுக்கும் துறையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. தற்போது இநஅப CSAT (Civil Service Atitude Test) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முக்கியத் தேர்வு: அடுத்த கட்டமான முக்கியத் தேர்வு ஒன்பது தாள்கள் கொண்டது.
1. இந்திய மண்டல மொழி தகுதித் தேர்வு - 300 மதிப்பெண்கள், 2. ஆங்கிலப் புலமைத் தேர்வு - 300மதிப்பெண்கள், 3. பொதுக் கட்டுரைத் தேர்வு (200 மதிப்பெண்கள்), 4. இரண்டு பொதுத் தேர்வுகள் (600மதிப்பெண்கள்), 5. நான்கு விருப்பப் பாடங்கள் (200 மதிப்பெண்கள்).
இந்திய ஆட்சிப்பணிக்கு மொத்தம் 2300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் நாம் பெறும் மதிப்பெண்களைப் பொருத்தே நமக்கு ரேங்க் வழங்கப்படும். கடும் உழைப்பும் விடாமுயற்சியும் மனோதிடமும் கொண்டு சவால்களைச் சந்திக்கும் இந்த ஓராண்டு காலப் படிப்பும், தேர்வும் வெற்றிகரமான முடிவுக்கு வருகிறது. விபரங்களுக்கு www.indianiasacademy.com





0 comments:
Post a Comment