Sunday, June 26, 2011


1. பல் மருத்துவப் படிப்பின் விலை ரூ.15 லட்சம்
2.பி.டி.எஸ். கட்-ஆஃப் எவ்வளவு?
3.பல் கூச்சம் ஏற்படுவது ஏன்?




பல் மருத்துவப் படிப்பின் விலை ரூ.15 லட்சம்

தமிழக பல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பில் (பி.டி.எஸ்.) சேரநிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நன்கொடை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சமாக அதிகரித்துள்ளது.
பி.டி.எஸ். படிப்புக்கான ஆண்டுகளுக்குச் சேர்த்து முதல் ஆண்டிலேயே நன்கொடையை உள்ளடக்கிய கட்டணத்தை பெற்றோர் செலுத்தும் வகையில் பெரும்பாலான சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயித்துள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால்இந்த ஆண்டு பி.டி.எஸ். படிப்புக்கான நன்கொடையும் ரூ.லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி: சென்னை பாரிமுனையில் 100 பி.டி.எஸ். இடங்களுடன் 1953-ல் தொடங்கப்பட்ட ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே தமிழகத்தில் உள்ளது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போகதமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களை மட்டும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுடன் சேர்த்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நிரப்பி வருகிறது.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 26 இடங்களும்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 23 இடங்களும்பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு இடங்களும்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 17 இடங்களும்தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 13இடங்களும்தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு இடங்களும்பழங்குடி வகுப்பினருக்கு இடமும் என மொத்தம் 85 இடங்கள் உள்ளன.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.2,000 உள்பட ஆண்டுக் கட்டணம் ரூ.10,290தான் என்றாலும்கூட 85 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால்பெரும்பாலான மாணவர்கள் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது. எனினும் மதுரையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முயற்சி எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுயநிதி அரசு பி.டி.எஸ். இடங்கள் எவ்வளவுசுயநிதி மருத்துவக் கல்லூரிகளைப் போன்றே சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் 65 சதவீதம் (சிறுபான்மை அல்லாதவை) அல்லது 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு அளித்து வருகின்றன. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 15 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 750-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கின்றன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 450-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாடின்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பெரிய மருத்துவ பல்கலைக்கழக வளாகங்களில் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இவை தங்களது மொத்த இடங்களில் ஒரு இடத்தைக்கூட அரசு ஒதுக்கீட்டுக்கு அளிப்பதில்லை. அனைத்து இடங்களையும் "நுழைவுத் தேர்வுமுறையில் நன்கொடை மூலம் நிரப்பிக் கொள்கின்றன.   
சுயநிதி அரசு பி.டி.எஸ். கட்டணம் எவ்வளவுசுயநிதி அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்துக்கு கடந்த ஆண்டு நீதிபதி குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.85,000. இந்தக் கட்டணத்துடன் சேர்த்து பரிசோதனைக்கூட கட்டணம் என முதல் ஆண்டில் ரூ.40,000 முதல் ரூ.லட்சம் வரை மாணவர்களிடமிருந்து பெறுவதை சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
ஆகபிளஸ் இறுதித் தேர்வில் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள்ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை இருந்தால்தான் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடத்தில் பி.டி.எஸ். படிப்பில் சேர முடியும்.
நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். கட்டணம் எவ்வளவுகுறைந்த கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து பி.டி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் அளிக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் நிர்ணயித்துள்ளன.
பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள்நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ.லட்சம் வீதம் ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.20 லட்சமும்பிரபலம் அடையாத சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.லட்சம் வீதம் ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.15 லட்சமும் முதல் ஆண்டிலேயே நன்கொடையை உள்ளடக்கிய கட்டணமாக நிர்ணயித்துள்ளன.


பி.டி.எஸ். கட்-ஆஃப் எவ்வளவு?

தமிழகத்தில் பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளது.
பி.டி.எஸ். படிப்பில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்197-ஆகவும் (கடந்த ஆண்டு 193.75) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்196-ஆகவும் (கடந்த ஆண்டு 192.75) இருக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிளஸ் முடித்த மாணவர்களிடமிருந்து எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைத்தான் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு பெறுகிறது.
ரேங்க் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கப்படும்போது,எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதியுள்ள மாணவர் யாராவது பி.டி.எஸ். படிப்பைத் தேர்வு செய்தால்அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். இடத்தை அந்த மாணவருக்கு தேர்வுக் குழுவினர் அளிப்பதும் வழக்கம்.
நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் மிக அதிகமாக உள்ளதையடுத்து (அனைத்துப் பிரிவினர் கட்-ஆஃப் 199), பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளது.
கட்-ஆஃப் மதிப்பெண் அதிகம் எடுத்தும்கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள்மதிப்பெண் அடிப்படையில் அடுத்தபடியாக சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இருந்தும்ஆண்டுக்கு ரூ.3.5லட்சம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் பி.டி.எஸ். படிப்பில் சேர விரும்புவார்கள். எனவே அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு சற்று குறைவாகபி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண்ணை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதாலும்இந்த ஆண்டு ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளதாலும் பெரும்பாலான மாணவர்களுக்கு சுயநிதி அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடம் மட்டுமே கிடைக்கும்.
நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) பி.டி.எஸ். படிப்புக்கு வகுப்பு வாரியாக உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்:-
    ஓ.சி.--197.00
    பி.சி.--196.00
    பி.சி. (எம்)--195.00
    எம்.பி.சி./டி.சி.--194.75
    எஸ்.சி.---189.00
    எஸ்.சி. (ஏ)--185.00
    எஸ்.டி.--183.00

பல் கூச்சம் ஏற்படுவது ஏன்?
  
பல் போனால் சொல் போகும் என்பது நாம் அறிந்ததே.
 பல் பராமரிப்பு அனைத்து வயதினருக்கும் அவசியம் என்பதும் நாம் அறிந்ததே. இருப்பினும் சில பழக்கவழக்கங்கள்உணவு முறைகள்பரம்பரை போன்ற காரணங்களினால் பல் பிரச்னை பெரிய அளவில் தொல்லை தருவதாக உள்ளது.
 முக்கியமாக குளிர்ந்த ஐஸ்கிரீமோசூடான பானமோ குடிக்கும்போது உங்களுக்கு சுரீர் என வலி ஏற்படுகிறதாநீங்கள் பற்கூச்சத்தால் அவதிப்படுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
 பற்சிதைவுபல் உடைதல்எனாமல் தேய்த்தல்முறையற்ற வகையில் கடுமையாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவதுபற்களை விட்டு ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது.
 மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து கலந்த பற்பசைஃபில்லிங், "ரூட் கெனால்போன்ற சிகிச்சை முறைகளை பற்கூச்சத்தின் தீவிரத்துக்கேற்ப மேற்கொள்ளலாம்.
 அதிக நேரம் பல் தேய்த்தலையும்படுக்கைவசமாக தேய்த்தலையும்கடின குச்சங்கள் கொண்ட பிரஷ்ஷினால் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
 தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கமுள்ளவர்கள்அதை தடுக்க ஸ்பிளிண்ட் அல்லது நைட்கார்டு பயன்படுத்தலாம்.
 எனவேஆண்டுக்கு இரு முறை அல்லது குறைந்தது ஒரு முறையாவது தகுந்த பல் மருத்துவரை அணுகி பற்களுக்கான ஆலோசனைசிகிச்சையைப் பெறுவது நல்லது.
 மேலும் விவரங்களுக்கு...:
 டாக்டர் ஏ.வி. அருண்,
 தி ஸ்மைல் சென்ட்டர்,
 ஏ 29/1, 2}வது பிரதான சாலை,
 அண்ணாநகர் (கிழக்கு),
 சென்னை }600102., செல்: 9884042526.


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More